“நமது இலட்சியப் பாதையில் நடைபோட வருவோரைத் தடையின்றி வரவேற்போம். ஆனால், அவர்கள்தான் இந்தப் பாதையையே அமைத்தவர்கள்போலக் காட்டிக்கொள்ளும்போது வாய்விட்டுச் சிரிப்போம்.”
quote35
“இந்தியாவில், பெரும்பான்மை – சிறுபான்மை என்ற இரு பிரிவினர் மாத்திரமல்ல, இன்னொரு பான்மையும் இருக்கிறது. அதாவது, இந்த இருபான்மையினரையும் வாழவிட அனுமதிக்காத விஷப்பான்மை.”
quote34
“ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தினால், அதைக்கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும். அறிவொளி பெற்ற ஒரு பெண்ணாலும் அது முடியும்.”
quote33
“உணர்ச்சியே இல்லாதவர்க்கு உயிர் இருந்தும் பயனில்லை. உணர்ச்சி வயப்படுவோருக்கு உயர்வு இருந்தும் பெருமையில்லை.”
quote32
“மேகங்களே! சூரியனால் உருவான நீங்கள், அந்தச் சூரியனையே மறைக்கிறீர்கள். மறந்துவிடாதீர்கள், காற்று வீசத் தொடங்கினால், கலைந்தும் கரைந்தும் மறைந்துவிடுவீர்கள்.”