தமிழினக் காவலர்

திருவாரூரில் 1930- களில் பள்ளி மாணவனாக இருந்தபொழுதே கலைஞர் அவர்களின் தமிழ்ப்பணி துவங்கியது. தமிழ்மொழியை காக்க வேண்டிய போராட்டக்களத்தில்தான் கலைஞரின் அரசியல் வாழ்வு அடித்தளமிடப்பட்டது. “வாருங்கள் போருக்கு புறப்படுவோம், வந்திருக்கும் இந்திப்பேயை விரட்டிடுவோம்” என்று இராஜாஜி சர்க்காரை அதிர வைத்தவர். 

இயல் இசை நாடகம் மட்டுமில்லாமல் 92 அடையாளங்களால்  தமிழை உருவகப்படுத்தினார். தமிழை மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்களையும், தமிழ் ஆளுமைகளையும் கொண்டாடத் தவறவில்லை அவர். ஆட்சிப்பொறுப்பேற்ற பொழுது தமிழில் உறுதி மொழி எடுத்துக்கொண்டவர், 

சென்னையில் வள்ளுவருக்கு கோட்டம் , குமரிமுனையில் வள்ளுவருக்கு சிலை, பூம்புகாரில் சிலப்பதிகார கலைக்கூடம், எனப் பல நினைவுச்சின்னங்களை இன்றைய தலைமுறைக்காக வடிவமைத்தார். தமிழுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தி நம் அன்னைத்தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்து மொழிக்காவலர் ஆனார். 

பொது அரசியல் என்பதைத்தாண்டி மொழி அரசியல் மூலம் இந்த சமூகத்தை கட்டமைத்தவர் கலைஞர் என்றால் அது மிகையாகாது.