இளஞ்சூரியன்

விடியலுக்காக காத்துக்கிடந்த தமிழ்ச் சமூகத்தில் திராவிட சூரியனாய் உதித்து தமிழுக்காகவும் தமிழருக்காவும் காலமெல்லாம் உழைத்திட்ட கலைஞர், தன்னுடைய இளமைப் பருவத்தை நெருப்பாற்றில்  நீந்திக் கடக்க வேண்டியதாயிருந்தது. 

பள்ளிபருவத்தில் கல்வி, விளையாட்டுக்களில் சிறந்து விளங்கியதோடு நில்லாமல், தன்னுடைய 14வது வயதிலேயே இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்க்கொடி பிடித்து, ”ஓடிவந்த இந்திப்பெண்ணே கேள்.. நீ தேடிவந்த கோழை நாடு இதுவல்லவே” என்று முழங்கினார். 

மேலும் தன்னுடைய 16வது வயதில் மாணவ நேசன் எனும் கையெழுத்துப்பிரதியையும், 17வது வயதில் திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணியான தமிழ்நாடு மாணவர் மன்றத்தையும் உருவாக்கி ஒரு தலைவனுக்கான தகுதிகளை தனக்குள் வளர்த்துக்கொண்டிருந்தார்.