தமிழ்நாடு மாணவர் மன்றம்
தன்னுடன் பயின்ற பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, ‘இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் இந்த அமைப்பின் மூலம் நடத்தினார். போராட்டத்துக்கு மாணவர்களைத் திரட்டுவதற்காக, 1941-ம் ஆண்டு, தனது 16-வது வயதில், ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். இதுவே பிற்காலத்தில் முரசொலி உருவாக வித்தாக அமைந்தது.
17 வயதில், ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு மாணவர் மன்றம், திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணி என்ற சிறப்பைப் பெற்றது. க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகள் இந்த அணியில் இணைந்து செயல்பட்டனர்.