ஓய்வறியா போராளி

வாழ்வில் போராட்டங்களை சந்தித்தவர் பலர் உண்டு… ஆனால் போராட்டமே வாழ்க்கையாய் இருந்தது திருக்குவளை தந்த திருமகனுக்கு.. அறிஞர் அண்ணாவின் பாசறையில் படைக்கு அஞ்சா தளபதியாய் தமிழகத்தின் மானம் காத்திடவும், தமிழரின் சுயமரியாதையை மீட்டெடுக்கவும் எத்தனை எத்தனை இன்னல்கள் வந்தாலும் சலிக்காமல் போராடி வென்று ஓய்வறியா போராளியாக நிலைத்திருப்பவர்  கலைஞர். 

கல்லக்குடியில் ஆரம்பித்த போராட்டப் பயணம், இடஒதுக்கீட்டு போராட்டம், மொழிப்போராட்டம், என நீண்டு கல்லறை செல்லும் வரை வாழ்க்கை நெடுகிலும்  சாட்டை சுழற்ற வைத்தது.. இறப்பிலும் தனையன்றி எவரும் வெல்ல முடியாது எனுமளவிற்கு பிறவிப்போராளியாய் வாழ்ந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.