நிறைந்து வாழும் கலைஞர்

கலைஞர்அரை நூற்றாண்டு கால தமிழக அரசியலின் தலைப்புச் செய்தி. 5 முறை முதல்வர் , 13 முறை சட்டமன்ற உறுப்பினர், தான் சந்தித்த தேர்தல்களில் தோல்வியே கண்டிராத வைரவிழா நாயகர், 50 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்திய  அண்ணாவின் அன்புத்தம்பி,     ஈழத்தமிழர் நலனுக்காக தன் ஆட்சியை துச்சமென எண்ணி தூக்கியெறிந்த திராவிட சூரியன், இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதி காத்த சமத்துவச் செம்மல், மக்கள் நல திட்டங்கள் பல தந்த தமிழினத் தலைவர், தமிழருக்காகவும் தமிழகத்திற்காகவும் தன் வாழ்நாள் எல்லாம் முழங்கிய முரசொலி. 

இரவலாகப்பெற்றிட்ட தன் அண்ணாவின் இதயத்தை திருப்பித்தந்து வங்கக்கரையோரம், ”ஓய்வில்லாமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகத்தினூடே இளைப்பாறிக்கொண்டிருக்கிறார் தன் தமிழினத்தையும், கழக உடன்பிறப்புகளையும், மு.க.ஸ்டாலின் எனும் தலைவன் வழிநடத்துவார் எனும் நம்பிக்கையோடு.