தன்னிகரற்ற தலைவர்

நவீன தமிழகத்தின் சிற்பியாக விளங்கிய கலைஞர் அவர்கள் தன்னுடைய தொலை  நோக்குத்திட்டங்கள் மூலம் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தவர். 

அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், சிப்காட் தொழில் வளாகங்கள், மாநில திட்டக்குழு உருவாக்கம், பெண்களுக்கு சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பேருந்துகள் நாட்டுடமை, பொது வினியோகத்திட்டம், திருமண மற்றும் மறுமண உதவித்திட்டங்கள், உழவர் சந்தைகள், மினி பஸ் போன்றவைகளை தோற்றுவித்து தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் சென்றார். 

இவற்றுகெல்லாம் மகுடம் வைத்தாற்போல் இந்தியாவே  தகவல் தொழில் நுட்பத்துறையில் தத்தி நடக்கத் துவங்கியிருந்த பொழுது, அதற்க்கான சட்டத்தையும் இயற்றி சென்னையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா ஒன்றினை அமைத்து தமிழகத்தை தகவல் தொழில் நுட்பத்துறையின் தலைநகராக உருமாற்றினார்.

வாழ்நாள் முழுவதும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என ஒவ்வொரு நொடியும் வளர்சிக்காக பாடுபட்டு பல தொலைநோக்கு திட்டங்களின் மூலம் நம் மாநிலம் சிறந்து விளங்கிட வழிவகை செய்திட்டார்.