பெரியார் சமத்துவ புரங்கள்
சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தலைவர் கலைஞரின் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தலைவர் கலைஞரின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சட்டங்களும் திட்டங்களும் அவர்களை சமுதாயத்தில் சமநிலைக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது. என்பதை யாராலும் மறுக்க இயலாது. சாதி சமய பொருளாதார வேறுபாடுகளற்ற சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் லட்சிய கனவாகும் அந்த கனவை நனவாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் இந்த சமத்துவபுர குடியிருப்புகள். தமிழகம் முழுவதும் 2006-11 கலைஞர் ஆட்சியில் மொத்தம் 240 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன.
இந்த திட்டத்தை தொடங்கியபோது தலைவர் கலைஞர் அவர்கள் அதற்கு ஒரு விளக்கம் தந்தார்கள். அதாவது அத்திமரம் அதன் கிளைகளிலும் காய்கள் காய்க்கும். அடிமரம், நுனி மரத்திலும் காய்கள் காய்க்கும். வேறு வேறு இடத்தில் காய்கள் காய்த்து உள்ளது என்பதற்காக நுனியில் காய்த்தது வெண்டைக்காய், அடுத்தது கத்தரிக்காய் என்று கூறமுடியாது அதுபோல் அனைவரும் மனிதர்களே, அவர்களில் ஏற்றத்தாழ்பு இல்லை என்று குறிப்பிட்டார்.
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் முதல் பிராமணர்கள் வரை அனைவரும் சமத்துவமாக சமூக நல்லிணக்கத்துடன் இந்த சமத்துவபுரங்களில் வசிக்க வேண்டும் என்பது சமுதாய புரட்சியினுடைய ஒரு மைல் கல். அந்த மகத்தான புரட்சியை தொடங்கி வைத்த சமுதாய சிற்பிதான் தலைவர் கலைஞர் என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.