வன்னியர் பொது சொத்து வாரியம்
தமிழ்நாட்டில் முற்காலத்தில் வன்னிய வள்ளல்கள் மற்றும் செல்வந்தர்களால் வன்னியர்களின் நலனுக்காக அறக்கட்டளை பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், மண்டபங்கள், கல்விக் கூடங்கள் என தங்கள் சொத்துக்களை எழுதி வைத்துள்ளனர்.
அந்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு பத்தாயிரம் கோடி ரூபாயை தாண்டும். அந்த சொத்துக்கள் எல்லாம் எந்த நோக்கத்திற்காக எழுதி வைக்கப்பட்டதோ அந்த வன்னியர்களுக்கு அது பயன்படாமல் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
வன்னியர்களுக்காக வழங்கப்பட்ட இந்த சொத்துக்களை ஒழுங்கிணைத்து வன்னியர்கள் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். என்பதற்காக “வன்னியர் பொதுசொத்து நல வாரியம் அமைந்திட வேண்டும். என்பது வன்னியர் சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கையாகும்.
வன்னிய பெருமக்களின் இந்த கோரிக்கையை முதல்வர் கலைஞர் ஏற்றுக்கொண்டு வன்னியர் பொது சொத்து நல வாரியத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு அது சட்டப்பூர்வமாக செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுத்திட 2009-ல் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்தார்.
வன்னியர் பொதுசொத்து நல வாரியம் சட்ட அந்தஸ்து பெறுவதற்கான முழு அளவிலான மசோதா தயாரிக்கப்பட்டு சட்டமன்றத்தில் வைக்கக் கூடிய நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது அதிமுக பதவிக்கு வந்தது.
அதிமுக ஆட்சிக்காலம்2011-2016 முடியம் வரை மேற்குறித்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுமில்லை. அதுகுறித்து எந்த வன்னிய தலைவரும் கண்டிக்க முன்வரவுமில்லை.