விவசாயிகளுக்கான நலன்கள்
எம்.ஜி.ஆர் ஆடசிக்காலத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ஒரு பைசா குறைக்க வேண்டும். என்ற கோரிக்கையோடு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஆனால் நடவடிக்கை இல்லை. 1989-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் “விவசாயிகள் விவசாயத்திற்கு ஒரு பைசா கூட கட்ட வேண்டாம்” என அறிவித்து இலவச மின்சாரம் வழங்கினார்கள்.
கோலப்பன் குழுவின் பரிந்துரைகளை ஏற்று விவசாய தொழிலாளர் நலவாரியம் அமைத்து உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, ஓய்வூதியம், சிறப்பு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. விவசாய நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள யாராவது இறந்து விட்டால் அவரின் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் உதவியும் மேலும் அந்த குடும்பத்தில் யாராவது விபத்தில் இறந்திருந்தால் அந்த குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இப்படி கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட தொகை 2886 கோடி ரூபாய்.
மின்சாரம் விரயம் ஆவதைத் தடுத்திட பழைய மின் மோட்டார்களை மாற்றி புதிய மோட்டார்களை 10,000 ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. சிறுகுறு விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டார்களுக்கு பதிலாக புதிய மின் மோட்டார்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இப்படி 62722 புதிய மோட்டார்கள் வாங்க 39 கோடியே 57 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி 2005-2006-ல் 61.17 லட்சம் டன் என்கிற நிலையில்; 2008-2009-ல் 71.01 லட்சம் டன்னாக உயர்ந்தது. மேலும் 2009-10-ல் 84.29 லட்சம் டன்னாக அதிகரித்தது.
2006-ல் ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் பதவியேற்ற விழா மேடையிலேயே கோட்டையில் இருந்து கோப்புகளை வரவழைத்து விவசாய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருந்த பயிர்க்கடன் 7000 கோடி ரூபாயை முழுமையாக தள்ளுபடி செய்து தனது இரண்டாவது கையெழுத்தைப் போட்டார்கள். இதனால் 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாய குடும்பங்கள் பயன்பெற்று மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த பயிர்க்கடன் தள்ளுபடியால் அதிமுககாரர்களுக்குத்தான் அதிக பலன் என அதிகாரிகளும் அமைச்சர்களும் கலைஞரிடம் கருத்து தெரிவித்தபோது, “நான் அவர்களை அதிமுககாரர்களாக, பார்கவில்லை தமிழர்களாக பார்க்கிறேன்” என்றார்.
ஆதிதிராவிட விவசாயிகள் “ தாட்கோ” நிறுவனத்தின் மூலம் 31.3.2016 வரை பெற்ற கடன் தொகை வட்டிஉள்பட 5 கோடி 25 லட்சம் ரூபாய் கழக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டது.
நில அடமானத்தின் மீது தொழில்புரிய வாங்கப்பட்ட பண்ணை சாரா கடன்களுக்கு வட்டி அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு வாங்கிய கடன் அசல் தொகையைச் செலுத்தினால் போதும் என கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு தலவரி, தலமேல் வரி, தண்ணீர் தீர்வை ஆகியன தி.மு.க. கழக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டன.
2006-2010 வரை திமுக ஆட்சியில் 36,71,372 விவசாயிகளுக்கு 8839 கோடி ரூபாய் புதிய பயிர்க்கடன் வழங்கப்பட்டன. 2005.06-ல் 9 சதவிகிதம்; 2006-07-ல் 7 சதவிகிதம்; 2007.08-ல் 5 சதவிகிதம்; 2008-09-ல் 4 சதவிகிதம் பயிர்க்கடன் வட்டி திமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லாத கடனும் வழங்கப்பட்டது.
விவசாயிகளை சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து சுழல்நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 27 ஆயிரத்து 294 குழுக்களுக்கு 27 கோடியே 29 லட்சத்துக்கு 940 குழுக்களுக்கு 402 கோடியே 56 லட்ச ரூபாய் பயிர்க் கடனாகவும் வழங்கப்பட்டன.
ஒரு லட்சத்து 79 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு
2 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் இலவச நிலம் ஒதுக்கப்பட்டது.
விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்து கழக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 2006-ல் 50 சதவிகித காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கி ஊக்கப்படுத்தியதால் 2005-06-ல் ஒரு லட்சம் விவசாகிகள் பயனடைந்த நிலையில், 2009-10-ம் ஆண்டில் 9 லட்சத்து ஓராயிரத்து 643 விவசாயிகள் திமுக அரசின் மானிய உதவி பெற்று பயிர்க்காப்பீடு செய்தனர்.
தென்னை விவசாயிகளின் நலன்களை மேம்படுத்திட திரு.ச.ராஜ்குமார் மன்றாடியார் தலைமையில் 27.8.2010 அன்று தென்னை விவசாயிகள் நல வாரியம் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.
வசதிக் குறைவான விவசாயிகளுக்கு வரிச் சுமையை நீக்க புன்செய் நிலங்களுக்கு அடிப்படை தீர்வை நிலவரி விலக்கு அளிக்கப்பட்டது.
கெய்க்வாட் கமிட்டி பரிந்துரையை ஏற்று 5 ஏக்கர் உள்ள சிறு உழவர்களுக்கு நஞ்சைக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
பண்ணைத் தொழிலாளர்களுக்கு அறுவடைக்கான நியாயமான ஊதியம் கதிரடிக்கிற களத்து மேட்டிலேயே கொடுக்க வேண்டும், என்றும் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான ஊதியம் வழங்காமல் களத்து மேட்டிலிருக்கும் விளைப்பொருளின் எந்த பகுதியையும் அப்புறப்படுத்தக் கூடாது என்றும் தமிழ்நாடு 1969 பண்ணைத் தொழிலாளர் நியாய ஊதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது இதனால் தஞ்சை மாவட்டத்தில் அறுவடை பணிகள் ஒழுங்காக நடக்கவும் ஏதுவாயிற்று.
1996-ம் ஆண்டு தலைவர் கலைஞர் 4வது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றபோது விவாசயிகள் நலன் கருதி அவர்கள் உற்பத்தி பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்கள். அந்த வகையில் 1999 நவம்பர் 14-ம் நாள் மதுரை அண்ணா நகரில் முதலாவது உழவர் சந்தையை கலைஞர் தொடங்கி வைத்தார். 1996-2001-ல் தமிழகம் முழுவதும் 117 உழவர் சந்தைகளும், 2006-11-ல் 45 உழவர் சந்தைகளும் என மொத்தம் 162 உழவர் சந்தைகள் கழக ஆட்சியில் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் உள்ளது போல இந்தியா முழுவதும் உழவர் சந்தைகள் திறக்கப்பட்ட வேண்டும். என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள், 2014-15 நிதிநிலை அறிக்கையில் உழவர் சந்தைகள் அமைக்கும் மாநில அரசுகளுக்கு ஊக்கம் தரப்படும் என்று அறிவித்தது திமுகவுக்கு கிடைத்த கௌரவம்.
கோவையில் விவசாய கல்லூரி அமைத்து அந்த கல்லூரி மூலம் நெல் விதைகளை விவசாயிகளுக்கு கொடுத்து ஒரு ஏக்கருக்கு 12 மூட்டை நெல்தான் விளையும் என்ற நிலையை மாற்றி ஏக்கருக்கு 35 முதல் 50 மூட்டைகள் உற்பத்தி செய்ய திட்டமிட்டவர் தலைவர் கலைஞர்.
கலைஞர் ஆட்சியில்தான் மத்திய அரசை வலியுறுத்தி உரத் தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
1967க்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் வறட்சி கடுமையான உணவுப் பஞ்சம், அன்று குடும்ப அட்டையில் ஒரு நபருக்கு 8 அவுன்சு என்பது 7 அவுன்சு ஆகி, 6 அவுன்சு மட்டுமே வழங்கப்பட்டது. அத்துடன் திங்கள் இரவு சாப்பிடாதீர் வியாழன் இரவு விரதம் இருப்பீர் என்றெல்லாம் மக்களுக்கு அறிவுரை கூறப்பட்ட காலம். இந்நிலையில் 1967-ல் ஆட்சிக்கு வந்த பேரறிஞர் அண்ணா அவர்களும் தொடர்ந்து 1969- முதல் முதலமைச்சர் பொறுப்பேற்ற கலைஞர் அவர்களும் விவசாயத்தில் புரட்சிகள் செய்து அரிசிப் பஞ்சத்தை விரட்டியடித்தார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் அரிசி கள்ளக் கடத்தலை தடுத்தது; கொள்முதல் ஏராளம் செய்தது; பணக்காரர்களிடம் தட்டிக் கேட்டது; ஏழை விவசாயிகளிடம் அன்புடன் கேட்டது; ‘Tap the rich and pat the poor’ என்பது அண்ணா அரசின் கொள்கையாயிற்று. அதனால் நெல் உற்பத்தியும் அரசின் நெல் கொள்முதலும் அதிகரித்தது. உணவுக் கட்டுப்பாடு அடியோடு நீக்கப்பட்டது.
1966-67 அளவில் இருந்தவரை விளைநிலங்கள் 152.12 லட்சம் ஏக்கர் மட்டுமே. 1973-74 முடிவில் திமுகவின் சிறப்பான நடவடிக்கைகளால் விளைநிலங்கள் 191,23 லட்சம் ஏக்கராக உயர்ந்தது. நெல், கரும்பு, வாழை, பருப்பு முதலிய தானிய வகைகள் அபரிமிதமாக விளைந்து உணவு உற்பத்தி அதிகரித்தது. அரிசி உற்பத்தியை மட்டும் எடுத்துக் கொண்டால் 1966-67-ல் 37 லட்சம் டன் என்பது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1975-76-ல்61 லட்சம் டன்னாக உயர்ந்தது.
அன்று 5 அவன்சு 6 அவுன்சு என வழங்கப்பட்ட ரேசன் அரிசி மாதம் 20 கிலோ என கலைஞரால் உயர்த்தி வழங்கப்பட்டதோடு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கினார்.
15 ஏக்கர் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்து உபரி நிலங்களை கைப்பற்றி நிலமற்ற 1,35,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளுக்கு அரசு உத்தரவாதம் தந்து விவசாயிகளுக்கு டிராக்டர் போன்ற விவசாய கருவிகள் வாங்கிட கடன் வழங்க கழக ஆட்சியில் ஆவன செய்யப்பட்டது…
நெல்லுக்கும் கரும்புக்கும் மத்திய அரசு அறிவிக்கும் விளையை விடக் கூடுதலாக, மாநில அரசின் மூலம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.