“மனிதனை பண்படுத்தப் பயன்படாதவரையில், மதம் என்பது யானைக்கு வரும் ஒரு நோயைக் குறிப்பிடுவதாகும்.” quote20
“கடைசி நம்பிக்கையாக இருக்கின்ற நீதியும் கைவிட்டு விடும்போதுதான், சமுதாயம் புரட்சியின் மீது நம்பிக்கை வைக்கிறது.” quote19
“ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக ரீதியான இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்காகவே, உள்நோக்கத்துடன் சாதியை ஒழிப்பதாகப் பேசுவது ஒரு சதிச் செயல் ஆகும்.” quote17
“வன்முறை எப்போது தலையெடுக்கிறது? ‘மெய்’ எழுத்து தாக்கப்பட்டு, ‘உயிர்’ எழுத்து அகற்றப்படும்போது, எஞ்சி நிற்பது ‘ஆய்த’ எழுத்துத்தானே!” quote16
“எதிர்க்கட்சிகளை அறவே அழித்துவிட முனைவது, ஜனநாயகமென்னும் நாணயத்தில் ஒரு பக்கத்தையே தேய்த்து மறைத்துவிடுவதைப் போன்றது.” quote15
”ஜனநாயகத்தில், எதிர்க்கட்சி என்பது நெடுஞ்சுவர்போல அசையாது நின்றால், ஆளுங்கட்சி என்ன பேசினாலும் அதைத்தான் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.” quote13
“எள் முனையளவு சாதி உணர்வு இருப்பினும், அது முள் முனையாக மாறி சமுதாயத்தின் கண்களை குத்திக் குருடாக்கிவிடும்.” quote12