வீட்டுவசதி
1966-ம் ஆண்டு அமைந்தகரையைத் தாண்டி சென்னை இல்லை. ஆனால், இன்று அதையும் தாண்டி அண்ணா நகர் என்றும் அதற்கு மேலும் விரிவடைந்து திருப்பெரும்புதூர் வரையிலும் சென்னை விரிவடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு தி.மு.க அரசுதான் காரணம். 1970-களில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது இருந்தபோது சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே. நகர்) போன்ற விரிவாக்க
நகரங்கள் உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டு வீட்டுவசதி வாரியத்தால் வீடுகள் கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று அவையெல்லாம் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளன.
அதன் தொடர்ச்சியாக ஒரும்புறம், ரியல் எஸ்டேட் தொழில் இன்று இமாலய வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், ஏழை எளிய மக்களும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் சொந்த வீடுகளில் குடியிருக்கும் நிலை உருவாகியிருக்கிறது.