நெருக்கடி நிலையை முதன் முதலில் எதிர்த்து தீர்மானம்
1975 சூன் 26-ம் நாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் அறிவுரையை ஏற்று குடியரசுத் தலைவர் அரசியலமைப்பின் 352 ஆவது பிரிவின்படி, நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார்.
அதை ஜனநாயக படுகொலை என விமர்சித்து கடுமையான கண்டனத்தை தெரிவித்த முதல் முதலமைச்சர் கலைஞரே !
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக சூன் 27-ம் நாள் காலை 11 மணிக்கு கூடிய திமுக செயற்குழு “நெருக்கடி” நிலை பிரகடனத்தைக் கண்டித்தும், உடனடியாக அதை திரும்பப் பெற கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்படி ஒரு தீர்மானத்தை இந்தியாவிலேயே முதன்முதலில் நிறைவேற்றிய கட்சி திமுகதான்!