மே தினம் – தொழிலாளர்கள்
சாதி மத இன மொழி நாடு இவைகளைக் கடந்து உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரே நிகழ்வு மே 1 – உலக தொழிலாளர்கள் தினம். உலகம் முழுவதிலுமுள்ள சோசலிஸ்டுகள் 1889-ம் ஆண்டு பாரீசில் ஒன்று கூடி இரண்டாவது அகிலம் (2nd international) என்ற அமைப்பை உருவாக்கி 1890 மே முதல் தேதியை உழைப்பாளர் தினமாக முதன் முதலாக கொண்டாடுவதென தீர்மானம் நிறைவேற்றினார்கள். அது முதல் மே தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1923-ம் ஆண்டு இந்தியாவில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சென்னை கடற்கரையில் மே தினத்தை கொண்டாடினார். மே தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கவும் கோரிக்கை வைத்தார். 47 வருடங்களுக்குப் பிறகு 1970-ல் தலைவர் கலைஞர் அவர்கள் மே தினத்தை ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை நாளாக அறிவித்தது. ஒரு சரித்திர நிகழ்வு.
அத்துடன் வி.பி.சிங் பாரதப் பிரதமராக இருந்தபோது மே தினத்திற்கு விடுமுறை நாளாக இந்தியா முழுவதும் அறிவிக்கச் செய்தார். மே தின நூற்றாண்டு விழாவினையொட்டி 1990ல் சென்னை நேப்பியர் பூங்காவிற்கு மே தின பூங்கா என பெயரிட்டு அங்கு மே தின நினைவுச் சின்னத்தையும் அமைத்து வரலாறு படைத்தது கலைஞர் ஆட்சி.