அரசியல் வாழ்க்கை
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நீதிக்கட்சியின் தலைவராக இருந்து செயல்பட்ட பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் பேச்சு, கலைஞரைப் பெரிதும் ஈர்த்தது. இதன் விளைவாக, தனது மகன்களில் ஒருவருக்கு ‘அழகிரி’ எனப் பெயர் சூட்டினார்.
திருவாரூர் அரசியல் கூட்ட மேடை ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோதே அழகிரிசாமி அவர்கள் மயங்கி விழுந்தார், காசநோயால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தார். அதைக் கண்ட மக்கள் கூட்டம் அவரைத் தாங்கிப் பிடித்தது. அந்த கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவன் “காசநோய் பீடித்த நீங்கள் இவ்வளவு ஆவேசமாக பேசலாமா? எனக்கேட்க, ‘என்னைவிட நாடு நோயில் இருக்கிறது, முதலில் அதை சரிப்படுத்த வேண்டும் ஆகவே தான் அப்படி பேசினேன்’ என்று பதில் கூறி இதை கண்டு நடுங்கிப் போனான் அந்த சிறுவன் வேறு யாருமில்லை கலைஞர் தான்!
இதேபோல், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஸ்டாலின் ஜோசப் மீதிருந்த பற்று காரணமாக, இன்னொரு மகனுக்கு ‘ஸ்டாலின்’ என்று பெயர் சூட்டினார். தான், திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்திருந்தால், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்றும் கலைஞர் கூறியிருக்கிறார்.