மன உறுதி கொண்டவர் கலைஞர்
சிறு வயதிலேயே தன்னம்பிக்கை மிக்கவராகவும், மன உறுதி
கொண்டவராகவும் விளங்கினார் கலைஞர்.
“பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு எப்போதும் கிடையாது. நான்
சிறுவனாக இருந்தபோது, எனது நண்பன் தென்னனுடன் திருவாரூர்
குளத்தில் நீந்திக்கொண்டிருந்தேன். குளத்தில் நீந்தி மைய மண்டபத்தை
அடைய வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. பாதி தூரம்
கடந்துவிட்டோம். ‘என்னால் முடியவில்லை. திரும்பி விடலாம்’ என்றார்
தென்னன். திரும்புவதென்றால் முக்கால் பகுதி நீந்த வேண்டும். மைய
மண்டபம் என்றால் கால் பகுதிதான் நீந்த வேண்டும்’ என்று கூறினேன்.
இருவரும் நீந்தி மைய மண்டபத்தை அடைந்தோம். எதையும் பாதியில்
விட்டுச் செல்வது என் பழக்கம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல்,
அரசியல் நான் விரும்பி தேர்ந்தெடுத்த பாதை” என்று தன்னுடைய
இளம்பருவ வாழ்க்கை குறித்து தனது நேர்காணல் ஒன்றில்
விவரித்திருக்கிறார் கலைஞர்.