கல்லக்குடி போராட்டம்
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த கலைஞர், திருச்சி அருகேயுள்ள கல்லக்குடி என்ற ஊரின் பெயர் டால்மியாபுரம் என்று மாற்றியமைக்கப்பட்டதைக் கண்டித்து, 1953, ஜூலை 15-ம் நாள், தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம் கலைஞருக்கு மிகப்பெரிய அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.