திராவிடர் கழக கொடி
1944-ம் ஆண்டுச் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியை ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திராவிடர் கழகத்துக்கெனக் கருப்பு நிறத்தின் நடுவே சிவப்பு வட்டம் எனத் தனிக் கொடி உருவாக்கப்பட்டது. கொடி உருவாக்கத்தின்போது சிவப்பு வண்ணம் இல்லாததால், பெரியாரின் குடியரசு இதழில் வேலை பார்த்து வந்த கலைஞர், குண்டூசியால் தன் விரலில் குத்திக்கொண்டு தன்னுடைய ரத்தத்தை எடுத்துச் சிவப்புப் பொட்டு வைத்தார்.