மொழிப் போர் – சிறைவாசம்
1948-ம் ஆண்டு ஜூன் 20-ம் நாள், மீண்டும் இந்தியை கட்டாயப் பாடமாக்கி காங்கிரஸ் அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார், அண்ணா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். 1948, செப்டம்பர் 15-ம் நாள் திருவாரூரில் மறியல் நடைபெற்ற அன்று, கலைஞருக்கும் தயாளு அம்மையாருக்கும் திருமணம் நடைபெற்றது. அன்று, திருமண நாளென்றும் பாராமல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார் கலைஞர்.
