மூதறிஞர் ராஜாஜி
கலைஞர் கருணாநிதி ஒரு முழுநேர அரசியல்வாதி, முழுநேர இலக்கியவாதி, முழுநேர பத்திரிகைக்காரர்.
தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்தப் பிள்ளையாண்டான் (கலைஞர்) கையிலிருக்கிறது”
பெருந்தலைவர் காமராசர்
கருணாநிதி என்னைப் போலவே பின்தங்கிய சமுதாயத்தில் பிறந்தவர். அவர் இல்லாவிட்டால் இந்த சமுதாயத்திற்கு வேறுயார் இருக்கிறார்கள் ?
ஜெயப்பிரகாஷ் நாராயண்
தமிழக முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள், உடனுக்குடன் துணிகரமாக நீண்ட காலப் பயனளிக்கக் கூடிய முடிவுகளை எடுக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்.
வினோபா பாவே
அண்ணாதுரையின் கருத்துக்கு மாறாக திரு.கருணாநிதி ஒருபொழுதும் நாட்டை நடத்திச் செல்ல மாட்டார். ஏனெனில் அவர் பெயரே கருணையும் நிதியும் சேர்ந்தது.
எல்லைக்காந்தி கான் அப்துல் கபார்கான்
இறைவனுக்குப் பிடித்த பணிகளைச் செய்து வருபவர் கருணாநிதி
பாபு ஜெகஜீவன்ராம்
திரு. கருணாநிதி அவர்கள் எந்த நாற்காலியில் அமருகிறாரோ அதன் காரணமாக அந்தப் பதவி நாற்காலிக்குப் பெருமை கிடைக்கும். அத்தகைய மனிதர்தான் கருணாநிதி.
எம்.பக்தவச்சலம்
கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை தி.மு.கழகத்தின் தொடர்போடுதான் தொடங்கியது. ஆனால் அவருடைய சிறிய வயதில் தானாகவே உழைத்துத் தம்முடைய ஆற்றலிலேதான் அவர் முன்னுக்கு வந்தார். அவரது ஆற்றலை அவரது இளமைக் காலத்திலேயே நான் பார்த்தேன்.
எம்.ஜி.ஆர்.
“பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் அமர்ந்து, அண்ணா வகித்த பொறுப்பினை ஏற்று, அண்ணா வழியில் நடந்து அவர் ஆளாக்கி விட்ட இளவல் அருமைச் சகோதரர் கலைஞர் கருணாநிதி அவர்கள் சோடை போகமாட்டார். சொக்கத் தங்கமெனப் பிரகாசிப்பார் என்று நாடும் நாமும் எதிர்பார்த்ததை கலைஞர் நிரூபித்து வருகிறார்.
பாவேந்தர் பாரதிதாசன்
தண்பொழிலில் குயில்பாடும் திருவாரூரில்
தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றங்காண்!
திருவாரூரின் புலி இளைஞர் காண்!
நாமக்கல் கவிஞர்
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை
உயிரெனக் காக்கும் ஒரு பெரும் பக்தன்
பேராசிரியர் சி.இலக்குவனார்
முன்னேற்றக் கழகத்தின் முடிசூடா மன்னன் நீ இன்னினிய பலநூல்கள் எழுதுகின்ற அறிஞன் நீ பன்னரிய நாடகங்கள் பரவுகின்ற நடிகன் நீ கன்னல்எனும் நற்பாக்கள் கட்டுரைக்கும் புலவன் நீ!
புலவர் ச.தண்டபாணி தேசிகர் (கலைஞரின் ஆசிரியர்)
தமிழினம் எங்கு துன்புற்றாலும், மொழியும் தமிழரும் எங்கு துன்புற்றாலும் ஓடிப்போய் அபயம் நல்கும் தலைவராக இருக்கிறார் கலைஞர்,
டாக்டர் மு.வரதராசனார்
தமிழ்ச்சமுதாயத்தின் தனிநிதி அனையவன் தமிழ்த் தொண்டாற்றலில் தலைமைச் சான்றோன் தமிழ்மேடைகளில் தலைமை ஏற்போன் தமிழ் வரலாற்றில் தனிமகிழ் கொள்வோன்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
திருக்குறளின் செயல் திறன் கலைஞர், கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைசிறந்து விளங்குவதற்குக் காரணம் அவர் திருக்குறளைப் படித்திருப்பதனால்தான்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
ஒரு போர் வீரருக்குரிய மனத்திண்மையும் மதிநுட்பமும் கலைஞர் கருணா நிதி பெற்றிருக்கிறார். அத்துடன் ஒரு சிறந்த ராஜதந்திரிக்குரிய அடக்கத்தையும் ஆழ்ந்து சிந்திக்கும் திறமையையும் பெற்றிருக்கிறார்.
கவியரசு கண்ணதாசன்
நிதான புத்தி நேரிய பார்வை
நின்று கண்டறிந்து நெடுவழி செல்லல்
சதாவதானத் தனிப்பெரும் திறமை
தன்னையறிந்து பிறர் உள்ளம் நோக்கல்
நதியென ஓடி நாளெல்லாம் உழைத்தல்
நாடும் மக்களும் நலம்பெற நினைத்தல்.
குன்றக்குடி அடிகளார்
“வள்ளுவன் நெறியும் அண்ணா நெறியும்
வாழும் வகைக்கிரு கால்களாம் என்றே
கொண்ட கொண்டல் கொழிதமிழ்க் கலைஞர்
புதிய புறநானூற்றைப் படைக்கும் புரவலர்!
எம்.கல்யாணசுந்தரம்
கலைஞர் கருணாநிதி தமது அரசியல் வாழ்க்கையில் செல்வாக்கின் உச்சியை எட்டிப் பிடித்துள்ளார். துன்பத்தின் எல்லையையும் அடைந்துள்ளார். துன்பத்தை அனுபவிக்க நேரும்போது துவண்டுவிடாமல் கட்சியைக் காப்பாற்ற அவர் காட்டிய மனோபலமும் துணிச்சலும் வியப்பைத் தருவதாகும்.
ஆர்.நல்லக்கண்ணு
சிலர் தீவிர கிளர்ச்சிக்காரர்களாக இருந்திருக்கலாம். ஆனால் நிர்வாகத் திறமை இருக்காது. சிலர் சிறந்த நிர்வாகியாக இருப்பார்கள். மக்களைப் புரியாத வெறும் அதிகாரிகளாக இருப்பார்கள். கலைஞர் மக்களின் நாடிபிடித்துப் பார்த்து மக்களையும் தமது கட்சி நடத்தும் இயக்கங்களில் ஈடுபடுத்தும் திறன் படைத்தவர்.
தியாகி செங்கல்வராயன்
டாக்டர் கலைஞர் 50 ஆண்டு காலமாக நன்றாகப் பழகி வந்திருக்கிறேன், மாறுபட்ட கருத்துக்கள் மட்டுமல்ல வேறுபட்ட கட்சிகள் சார்ந்து இருந்தாலும் அவருடைய சீரிய பண்புகள் குணங்கள், அரசியல் போக்கு காரணமாகப் போற்றுகிறேன்.