இந்திராகாந்தி
தி.மு.கழகத்தின் தலைவர் கருணாநிதி அவர்கள், நண்பராக இருந்தாலும், விரோதியாக இருந்தாலும் இரண்டிலும் உறுதியாக இருப்பவர்.
சரண்சிங்
திரு.அண்ணாதுரை உருவாக்கிய உயர்ந்த மரபுகளைப் புகழத்தக்க விதத்தில் திரு.கருணாநிதி கையாண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.
வி.பி.சிங்
எனக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் என் பக்கத்தில் இருந்து கலைஞர் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். தனது ஆட்சியைப் பற்றிக்கூடப் பொருட்படுத்தாமல் ஒரு கொள்கைக்காக இலட்சியத்திற்காக என்னோடு ஒன்றுபட்டிருக்கிறார்.
தேவேகவுடா
தமிழகத்துக்கான நிதி, திட்டங்களைக் கூடுதலாகப் பெறுவதில் கலைஞர் அதிக அக்கறை காட்டுவார். வி.பி.சிங், குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங் எல்லோரிடமுமே தமிழகத்துக்கான திட்டங்களைப் பெறுவதில் அவர் அழுத்தம் கொடுத்தார் என்பது எனக்குத் தெரியும். இதனால்தான், ஒரு கட்டத்தில் வட இந்திய ஊடகங்கள் ‘இந்தியாவின் தலைநகரம் இப்போது டெல்லி அல்ல; சென்னை’ என்றெல்லாம் எழுதின.
ஏ.பி.வாஜ்பாய்
திரு.கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், மக்கள் தொண்டில் சமுதாயத்தின் நலிந்த பிரிவினரை முன்னேற்றுவதற்காகத் தம் வாழ்வைத் தந்துள்ளார். இந்த நலிந்த பிரிவு மக்கள் நலமும், பொருளாதார எழுச்சியும் பெறுவதற்காகப் போராடும் ஒரு மாபெரும் வெற்றி வீரர்!
மன்மோகன்சிங்
இந்திய நாட்டின் மற்றும் தமிழ்நாட்டின் வரலாற்றிலும் கலைஞர் அவர்களின் பெயர் பொன்னெழுத்துகளால் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.