கே.கே.ஷா
அரசியல்வாதிகள் இடையில் மறைந்து விடலாம். ஆனால், எழுத்தாளராக – மனிதர் தன்மை உள்ளவராக இருக்கும் கருணாநிதி, என்ன நேர்ந்தாலும் சரித்திரத்திலிருந்து மறைய மாட்டார்.
சி.சுப்பிரமணியன்
அரசியல் மட்டுமின்றி, கலைத்துறையில் மட்டுமின்றி, நிர்வாகத்தாறயிலும்கலைஞர்சிந்து விளங்குபவர். இந்திய துணைக் கண்டத்தில் ஒரு எடுத்துக் காட்டான தலைவராகத் திகழ்கிறார்.
கோபாலகிருஷ்ணகாந்தி
கருணாநிதியின் அரசியல் அண்ணாவின் அரசியலை அடியொற்றியதாக அமைந்தது.
ஏழைகளுக்கு ஆதரவான, விவசாயிகளுக்கு உற்ற துணையான, சாமானிய மக்களுக்கு ஆதரவான, சாதியத்துக்கும் , மதவாதத்துக்கும் எதிரான கொள்கைகளின் வழியே ஆட்சியதிகாரத்தை அணுகுவது அந்த அரசியல். தேசிய அரசியல் சதுரங்கத்தால் தவிர்க்கவே முடியாதவராகத் திகழ்ந்த ராஜதந்திரி கருணாநிதி.
சுர்ஜித்சிங் பர்னாலா
திரு.மு.கருணாநிதி அவர்கள் இந்திய அரசியலில் அருகில் காணப்படும் பன்முகத் திறன்கள் கொண்ட தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். கலைஞர் முதலமைச்சராக – நலிந்த பிரிவு மக்களை எண்ணி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காவே பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்,
பி.சி.அலெக்சாண்டர்
புதுமை செறித்த அறிஞர் மிகச் சிறந்த பேச்சாளர். இனிய பாணியில் எழுதும் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்.எளிய சமுதாயத்தினருக்காக அரை நூற்றாண்டுக்கும் மேலாக இடையறாது பணியாற்றி வருபவர். மிகச் சிறந்த நிர்வாகி, விரைந்து முடிவெடுக்கும் திறமை படைத்தவர். அவருடன் பணியாற்றுவது மிகபெரிய பேறு
சென்னா ரெட்டி
இந்தியாவில் அனைத்துக் கட்சித் தலை வர்களும் கலைஞரை போலச் செயல்பட்டால் நாடு நன்றாக இருக்கும். தேசிய ஒருமைப்பாடு வளரும்
பாத்திமா பீவி
“புகழொளி பரப்பும் தமிழக முதலமைச்சர் கலைஞர் எவரும் வெற்றி கொள்ள முடியாத ஒரு சமூகச் சீர்திருத்தவாதி ஆற்றல்மிகு எழுத்தாளர், சொல்லேருழுவர், ஆட்சிக்கலையில் மிகச் சிறந்த நிர்வாகி, அவர்தம் வாழ்வை பல்வேறு சாதனைகளும், பெருமைகளும் அணி செய்கின்றன.