பேராசிரியர் க.அன்பழகன்
நான் முதன் முதலில் கலைஞரைப் பார்த்தபோது ஆயிரக்கணக்கான தோழர்களில் ஒருவராகத்தான் பார்த்தேன். சட்டமன்ற உறுப்பினராகப் பார்த்தபோது பதினைந்து பேரிலே ஒருவராகப்பார்த்தேன். அண்ணா விருகம்பாக்கம் மாநாடு நடத்தியபோதுதான் மூவரிலே ஒருவராக அவரைநான் பார்த்தேன். நாவலர் நம்மை விட்டுப் பிரிந்தபோதுதான் என்னிலே ஒருவராக அவரை நான்பார்த்தேன். இந்த உணர்வு ஏற்பட்டதற்குப் பின்னர், அவர் கோப்பெருஞ்சோழனாக வீற்றிருந்தாலும், நான்பிசிராந்தையாராக அவரைச் சார்ந்து நிற்பேன். கலைஞர் தமிழக மக்களுக்கு வழிகாட்டுகிற வள்ளுவராகத் திகழ்ந்தால், நான் அவருக்கு உரை எழுதுகிற ஒரு தமிழ் அறிஞனாகத்தான் விளங்குவேன்.
“வாழ்விலோர் திருநாள்” என்ற ஒரு பாடலைப் பல ஆண்டுகளுக்கு முன் கேட்டிருப்பீர்கள்.அப்படித்தான் இன்றைக்குக் கலைஞர் அவர்களுக்கு நிகழ்கின்ற பாராட்டு அவருடைய வாழ்விலே ஒருநாள் திருநாள் என்றுகூட அல்ல; தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்விலே ஒரு திருநாளாக இந்த நாள்அமைந்திருக்கின்றது. இன்று ஒன்றை நான் நினைவூட்ட விரும்புகிறேன். கலைஞர் எந்த இடத்தைநிறைவு செய்கிறார் என்று பார்த்தால் ஒரு புலவருடைய இடத்தை அல்ல; ஒரு எழுத்தாளருடையஇடத்தை அல்ல; ஒரு சட்டமன்ற உறுப்பினருடைய இடத்தைக் கூட அல்ல; ஒரு அரசியல்வாதியின்இடத்தைக்கூட அல்ல; தந்தை பெரியாரின் இடத்தையும், அறிஞர் அண்ணாவின் இடத்தையும் அவர்நிறைவு செய்கிறார்.