62 நாள் தனிமைச் சிறை
1957 அக்டோபர் 13-ம் நாள், இந்தி எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டது. அதற்குத் தலைமையேற்ற கலைஞர், சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தியதால் நான்கு மாதங்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 1965-ம் ஆண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கலைஞரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த காங்கிரஸ் அரசு, அவரை பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைத்தது. 62 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு கலைஞர் விடுதலை செய்யப்பட்டார்.
“என் தம்பி கருணாநிதி தனிமைச்சிறையில்கிடக்கும் பாளையம்கோட்டை தான் இனி நான் யாத்திரை செய்ய வேண்டிய புனித பூமி” என்று அறிஞர் அண்ணா சொன்னார்!