மாநில முதல்வர் தேசியக் கொடி ஏற்றும் உரிமை
இந்தியா விடுதலை பெற்ற பின்பு, ஜனவரி 26-குடியரசு நாளன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரும், ஆகஸ்ட்15-விடுதலை நாளன்று பிரதமரும் டில்லியில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.
ஆனால் மாநில தலைநகர்களில் அந்த இரண்டு நாள்களிலும் ஆளுநரே தேசிய கொடியை ஏற்றி வந்தார்.
1969-ஆகஸ்ட் 15-ம் நாள் மாலையில் சென்னை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர் ஆகஸ்ட் 15-ம் நாள் மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
மத்திய அரசும் கலைஞரின் கோரிக்கையை ஏற்று “மாநில தலைநகரங்களில் சனவரி 26 குடியரசு நாளன்று ஆளுநர்களும், ஆகஸ்ட் 15 விடுதலை நாளன்று முதலமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றுவார்கள்” என்று ஆணை பிறப்பித்தது. 1974 ஆகஸ்ட் 15-ம் நாள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரத்தில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். எனவே விடுதலை நாளன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக தேசிய கொடி ஏற்றிய பெருமை கலைஞரையே சாரும், கலைஞர் பெற்றுத் தந்த இந்த உரிமையால் தான், இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதலமைச்சர்களும் விடுதலை நாளன்று தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.
“சுதந்திரக் திருநாளில் மாநில முதல்வர் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த மிகச் சிறந்த முதல்வர் கலைஞர் தான்” என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் கலைஞரை வெகுவாகப் பாராட்டினார்கள்.