மத்திய அமைச்சரவை தீர்மானம்
9.8.2018 அன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. அக்கூட்டத்தில் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
“”””கலைஞர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவரது மறைவால் நாடு புகழ் பெற்ற ஒரு மூத்த தலைவரை இழந்துவிட்டது. ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவர் இருந்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழ்த்திரையுலகில் புகழ்பெற்ற கதாசிரியராகத் திகழ்ந்தார். எழுத்து மற்றும் பேச்சாற்றலில் புகழ்பெற்று விளங்கினார். அவரது மறைவால் தமிழகம் செல்வாக்கு மிக்க தலைவரை இழந்துவிட்டது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் இந்திய அரசின் சார்பிலும் ஒட்டுமொத்த நாட்டின் சார்பிலும் மத்திய அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது”” என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.