2006 – 2011 ஆட்சிக் காலம்
- கிலோ அரிசி 1 ரூபாய் என மாதம் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம்.
- ஏழை, எளியோர்க்கு விலைவாசியின் கடுமை குறைய பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா செரிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவை சிறப்புப் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் மாதந்தோறும் வழங்கும் திட்டம்.
- ஏழை, எளியோர் பயன்பெற ரூ.70 மதிப்புடைய 10 சமையல் பொருட்கள் ‘மானிய விலை மளிகைப் பொருட்கள்’ என ரூ.50-க்கு வழங்கப்பட்டது.
- தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் தைத்திங்கள் முதல் நாளை எல்லோரும் கொண்டாட ரூ.1 கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு, ரூ.80 கோடி செலவில் பொங்கல் பரிசாக அரிசி, பருப்பு, வெல்லம் முதலானவை வழங்கப்பட்டது.
- 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
- கூட்டுறவுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளின் பயிர்க் கடனுக்கு வட்டி ரத்து செய்யப்பட்டது.
- சாதாரண நெல், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.850, சன்ன ரக நெல் ரூ.880 என நடுவண் அரசு நிர்ணயித்த விலைகளை உயர்த்தி சாதாரண நெல் விலை ரூ.1,000 எனவும், சன்ன ரக நெல் விலை ரூ.1,050 எனவும் வழங்கப்பட்டது.

- உழுவோரும் நுகர்வோரும் பெரும் பயன் அடைந்திட மாநிலமெங்கும் 117 உழவர் சந்தைகள் மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டது.
- கரும்பு விலை டன் ரூ.811 என்பதை நடுவண் அரசு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தாமல் இருந்த நிலையில், அதை கழக அரசு ரூ.1,000 ஆக உயர்த்தி, போக்குவரத்துக் கட்டணமாக ரூ.90, சர்க்கரைக் கட்டுமான ஊக்கத் தொகை ரூ.30 சேர்த்து கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,220 வழங்கப்பட்டது.
- பயிர்க் காப்பீடு திட்டத்தில் 50 விழுக்காடு காப்பீட்டுத் தொகையாக அரசு மானியமாக வழங்கி ஊக்கப்படுத்தியதால், 2008 – 2009-ம் ஆண்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் அரசு மானியம் பெற்று காப்பீடு செய்தனர்.
- பயிர்க் காப்பீடு செய்யும் 25 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டது.
- ஆதிதிராவிட விவசாயிகள் ‘தாட்கோ’ நிறுவனத்தின் மூலம் 31.03.2006-ம் ஆண்டுவரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட ரூ.5 கோடியே 25 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டது.
- நில அடமானத்தின் மீது தொழில் செய்ய வழங்கப்பட்ட பண்ணைசாராக் கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு, வாங்கியக் கடன் அசல் தொகையை செலுத்தினால் கடன் ரத்து செய்யப்பட்டது.
- கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி 2005 – 2006-ல் 61 லட்சம் டன் எனவும், 2008 – 2009-ல் 91 லட்சம் டன் எனவும் உயர்ந்தது.
- விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 25 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 1 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 624 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
- 6 லட்சத்து 87 ஆயிரத்து 319 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 314 கோடியே 74 லட்சத்து 58 ஆயிரத்து 933 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.
- 2 ஆயிரத்து 267 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் 1 கோடியே 4 லட்சத்து 42 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டதுடன், மேலும் 25 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது.
- ரூ.220 கோடி செலவில் 11 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டு, ரூ.140 கோடி செலவில் 6 லட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டன.
- 1 லட்சத்து 75 ஆயிரத்து 355 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயக் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 427 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டது.
- 6 லட்சத்து 56 ஆயிரத்து 342 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
- காமராஜர் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாள் என அரசாணை பிறப்பித்து பள்ளிகளில் கல்வி விழா நடத்தப்பட்டது.
- 2 வயது முதல் 15 வயதுவரையுள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டையும் வாழைப்பழமும் வழங்கப்பட்டன.
- தமிழ்வழியில் பயிலும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெரும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டன. 11 லட்சம் மாணவ மாணவியருக்கு 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அரசுத் தேர்வுக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டன.
- பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.
- படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில், ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர்வரை வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற்பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் வழியே பெறுவதற்காக, திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மூலம், தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டது.
- ஆண்டுதோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும் 2 லட்சத்து 99 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்துப் பயணச் சலுகை வழங்கப்பட்டது.
- ஏழை மகளிர்க்கு பட்டப் படிப்புவரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்புவரை நீட்டிக்கப்பட்டது.
- தொழிற்கல்விச் சேர்க்கைக்கான இருந்ந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
- கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் 3 புதிய அன்ணா தொழிற்நுட்பப் பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன.
- 2006-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர் ஆகிய இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
- மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
- அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தமிழக அரசின் சார்பில் புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம், ஆகிய 5 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதுடன் திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
- பள்ளிகளில் 12-ம் வகுப்புவரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என சட்டம் இயற்றப்பட்டது.
- நூற்றாண்டு கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைக்கப்பட்டது.
- அருந்தமிழ்ச் சான்றோர் 62 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, 4 கோடியே 61 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டதுடன் நடப்பாண்டிலேயே மேலும் 25-க்கும் மேற்பட்ட அறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- மூவலூர் இராமாமிர்தம் அம்ம்மையார் திருமணத் திட்ட நிதியுதவி, ரூ.10,000 என்பது ரூ.20,000 என உயர்த்தப்பட்டு 2 லட்சத்து 14 ஆயிரத்து 189 ஏழைப் பெண்கள் பயன்பெற்றனர். மேற்கொண்டு 75 ஆயிரம் ஏழைப் பெண்கள் பயன்பெற ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச் சத்து பெறவேண்டும் என்பதற்காக ரூ.6,000 வீதம் 12 லட்சத்து 96 ஆயிரத்து 803 ஏழை மகளிர்க்கு 619 கோடியே 66 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு, மேலும் 4 லட்சம் தாய்மார்கள் பயன்பெற ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் 6 ஆயிரத்து 444 ஏழைப் பெண்களுக்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.
- ‘வருமுன் காப்போம் திட்டம்’ மீண்டும் செயல்படுத்தப்பட்டு 9,000 மருத்துவ முகாம்களில் 91 லட்சம் ஏழை எளியோர் பயன்பெற்றனர். மேற்கொண்டு 4,500 முகாம்கள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா 3 செவிலியர்களைப் பணியமர்த்தி 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிக்கப்பட்டதால், 2006-ல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 766-ல் இருந்து 2008-ம் ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரத்து 78 ஆக மூன்று மடங்கு உயர்ந்தது. கிராமப்புற மகளிர் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மூடிய அறுவை சிகிச்சைக்கு ரூ.20,000. சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.50,000. கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் என அரசு நிதி உதவி வழங்கும் ‘இளம் சிறார் இதய அறுவை சிகிச்சை திட்டம்’ 21.11.2007-ல் தொடங்கி 420 குழந்தைகளுக்கு 2 கோடியே 40 ஆயிரம் ரூபாய் செலவிலும், 887 ‘பள்ளிச் சிறார் இதய அறுவை சிகிச்சை திட்டம்’ 03.06.2008-ல் தொடங்கி 887 பள்ளிச் சிறார்களுக்கு 2 கோடியே 94 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவிலும் புகழ்வாய்ந்த 23 தனியார் மருத்துவமனைகள் மூலம் இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு குழந்தைச் செல்வங்களின் அரிய உயிர்கள் பாதுகாக்கப்பட்டன.
- கிராமப்புற ஏழைகளுக்கு உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட இ.எம்.ஆர்.ஐ நிறுவனத்துடன் இணைந்து 32 கோடி ரூபாய் செலவில் ‘அதிநவீன அவசர கால மருத்துவ ஊர்தி சேவைத் திட்டம்’ தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
- அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளில் 2 லட்ச ரூபாய்வரை நிதியுதவி வழங்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
- மக்கள் பயன்பெற உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- 1 லட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர்களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கும், சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2 லட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
- ஏறத்தாழ 2 லட்சத்து 5 ஆயிரத்து 350 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 37 ஆயிரத்து 595 கோடி ரூபாய் முதலீட்டிலான 29 புதிய தொழிற்சாலைகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அவற்றில் 8 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. மற்றவை தொடங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- படித்தும் வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறாத 3 லட்சத்து 53 ஆயிரத்து 488 இளைஞர்களுக்கு 156 கோடியே 15 லட்சத்து 30 ஆயிரத்து 604 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.
- ஏறத்தாழ 3 லட்சம் இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.
- வேலை வாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்கத் தவறிய 2 லட்சத்து 70 ஆயிரம் இளைஞர்கள், 2001 முதல் பதிவு மூப்புடன் மீண்டும் புதுப்பித்து பயனடைந்தனர்.
- முதியோர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.200 என்பது ரூ.400 என உயர்த்தப்பட்டது. 7 லட்சத்து 39 ஆயிரத்து 541 முதோரும், 7 லட்சத்து 90 ஆயிரத்து 41 ஆதரவற்றோரும் இதன் மூலம் பயனடைந்தனர்.
- கடுமையான மாற்றுத் திறன் கொண்டோருக்கான உதவித்தொகை, ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 10 ஆயிரம் பேர் பயனடைந்தனர்.
- 2006-ம் ஆண்டுக்குப் பிறகு, 10 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் உறுப்பினர்களைக் கொண்ட 61 ஆயிரத்து 687 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, 3 ஆயிரத்து 276 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள பெண்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், புதிதாக 1 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- மகளிர் சுய உதவிக் குழுக்களைப்போலவே 2006-ம் ஆண்டுக்குப் பிறகு 19 ஆயிரத்து 885 இளைஞர் சுய உதவிக் குழுக்களும், 30 ஆயிரம் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களும், 10 ஆயிரத்து 772 விவசாயிகள் கூட்டுப் பொறுப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு தேவையான நிதியுதவி வழங்கப்பட்டது.
- அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2,033 கோடி செலவில் 10 ஆயிரத்து 96 கிராம ஊராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.210 கோடி செலவில் 420 பேரூராட்சிகளிலும், நிதிநிலையில் நலிந்திருந்த 30 நகராட்சிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிச் சுமையைக் குறைத்து மக்களுக்கு வசதிகள் செய்திட, அவை அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.793 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது.
- 45 ஆயிரத்து 943 கிலோமீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டன.
- 4 ஆயிரத்து 730 கிலோமீட்டர் நீளம்கொண்ட சாலைகள் இருவழித் தடங்களாக அகலப்படுத்தப்பட்டன.
- தமிழகத்தில் உள்ள சாலைகளில் 551 சிறு மற்றும் பெரிய பாலங்கள் ரூ .557 கோடி செலவில் கட்டப்பட்டன.
- தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
- நிலவரி, ஏக்கர் ஒன்றுக்குப் புன்செய் நிலங்களுக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய் எனவும், நன்செய் நிலங்களுக்கு 50 ரூபாய் என்பது 5 ரூபாய் எனவும் பெயரளவுக்கு மட்டும் வசூலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
- ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டன.
- அரியலூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
- தருமபுரி மாவட்டத்தில் அரூர் – புதிய கோட்டம், திருவண்ணாலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஆகியவை புதிய வட்டங்களாக அமைக்கப்பட்டன.
- கட்டணம் உயர்த்தப்படாமல் ஏற்கெனவே விடப்பட்ட 9,248 புதிய பேருந்துகளுடன், மேலும் 3,500 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன.
- இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற, 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
- அருந்ததியினர் சமுதாயத்தினரின் அவலம் தீர, 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
- சமத்துவச் சமுதாயம் காணும் நோக்கில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
- அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடம், மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- சென்னையில், 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த மாநில நூலகம் அமைக்கப்பட்டது.
- சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 400 கோடி ரூபாய் செலவில் புதிய சட்டமன்ற தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டது.
- அடையாறு பூங்கா திட்டம், 100 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டது.
- சென்னைப் பெருநகரின் குடிநீர் பற்றாக்குறையை முற்றிலும் போக்கிட, வடசென்னை மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி கோடி ரூபாய் நிதியுதவியுடன், தென்சென்னை நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது.
- ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.1,330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
- இராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.630 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
- சென்னை மதுரவாயல் – சென்னைத் துறைமுகம் இடையே ரூ.1,655 கோடி மதிப்பீட்டில் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டது.
- மக்களுக்கு எந்தவொரு மதத்தில் இருந்தும் விடுபட உரிமை வேண்டும் என்பதற்காக, கட்டாய மதமாற்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.
- மூன்றாவது காவல் ஆணையம் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அக்குழு வழங்கிய 444 பரிந்துரைகளில் 278 பரிந்துரைகள் ஏற்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டன.
- 2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
- டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்டிருந்த சலுகைகளை மீண்டும் வழங்கியதுடன், 6-வது ஊதியக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இதுவரை வரலாறு காணாத வகையில் ரூ.4,247 கோடி செலவில் இடைக்கால நிவாரணமாக மூன்று மாத ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டது.