1996 – 2001 ஆட்சிக் காலம்
- உயர்கல்வித் துறை உருவாக்கம்.
- நெடுஞ்சாலைத் துறை உருவாக்கம்.
- தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்கம்.
- சமூக சீர்திருத்தத் துறை உருவாக்கம்.
- இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை உருவாக்கம்.
- சென்னையில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டது.
- உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு.
- பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.
- உழவர் சந்தைத் திட்டம்.
- வருமுன் காப்போம் திட்டம்.
- கால்நடைப் பாதுகாப்புத் திட்டம்.
- பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம்.
- விவசாயத் தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலனுக்கெனத் தனித்தனி நல வாரியங்கள்.
- தாய்மொழி வளர்ச்சிக்குத் தனி அமைச்சகம்.
- போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்.
- தென்குமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை.
- ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் தடைபட்டுக் கிடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல்.
- கிராமங்கள்தோறும் சிமெண்ட் சாலைகள்.
- வரலாறு காணாத வகையில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டம்.
- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம்.
- கிராமப்புற பெண்களுக்குத் தொழிற்கல்லூரிகளில் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு.
- கிராமப்புறங்களுக்கு மினிபஸ் திட்டம்.
- சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம்.
- சேமிப்புடன்கூடிய மகளிர் சிறுவணிகக் கடன் திட்டம்.
- பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம்.
- மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமைக்கப்பட்டது.
- மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது.
- அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.
- 10,000 சாலைப் பணியாளர்கள் நியமனம்.
- 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் நியமனம்.
