வங்கிகள் தேசிய மயம்
திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் பிரதமராக இருந்தபோது டெல்லியில் நடைபெற்ற திட்டக் கமிசன் கூட்டத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் பங்கேற்று பேசும்போது “ வங்கிகளை தேசிய மயமாக்கும் யோசனையை” முன் வைத்தார்கள். திருமதி இந்திரா காந்தி அவர்கள் கலைஞரின் கருத்தை ஏற்று வங்கிகளை தேசியமயமாக்கினார்கள். இந்த அற்புதமான திட்டத்திற்கு ஏழை எளிய மக்கள் மத்தியில் வரலாறு காணாத வரவேற்பு கிடைத்தது.