குடிநீர் திட்டங்கள்
தமிழ்நாட்டில் வைகை-பாபநாசம்-சாத்தனூர்-ஆழியாறு மணிமுத்தாறு- மேட்டூர்-பவானி சாகர் உள்பட 89 அணைகளும், பூண்டி- சோழவரம்- செம்பரம்பாக்கம்- வீராணம் உள்பட 13 ஆயிரம் ஏரிகளும், 30 லட்சம் கிணறுகளும் எண்ணிக்கையில் அடங்கா ஆழ்துளை கிணறுகளும் உள்ளன.
20க்கும் மேற்பட்ட புதிய அணைகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டன.
தமிழகத்தில் முதன் முதலாக காவேரி- குண்டாறு மற்றும் தாமிரபரணி நம்பியாறு ஆகிய இருபெரும நதிநீர் இணைப்பு திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன.
ரூ. 1000 கோடி செலவில் வடசென்னை மீஞ்சூரிலும், ரூ.908 கோடி செலவில் தென்சென்னை நெம்மேலியிலும் ஆக இரண்டு இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. இதில் மீஞ்சூரில் பணிகள் முடிந்து அதனை 3.7.2010-ல் முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார்கள்.
மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கென்றே பிரத்தியேகமாக குடிநீர் வடிகால் வாரியம் என்ற அமைப்பு 1971-72-ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவராக செ.கந்தப்பன் அவர்கள் பணியாற்றினார்.
இதன் மூலம் கழக ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றப்பட்ட ஒரு சில குடிநீர்த் திட்டங்கள் பின்வருமாறு. மேட்டூர் குடிநீர் திட்டம், மதுரை மேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம், பல்லடம் கூட்டுக் குடிநீர் திட்டம், விருதுநகரிலே மூன்று குடிநீர் திட்டங்கள், நாகப்பட்டினத்திலே கூட்டுக் குடிநீர் திட்டம், ஆத்தூரில் கூட்டுக் குடிநீர் திட்டம், வேலூர் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம், போரூ, மதுரவாயல், ஆவடி, உள்ளகரம், திருவொற்றியுர், ஆலந்தூர், அம்பத்தூர் ஆகிய இடங்களில் குடிநீர் திட்டங்கள் ஈரோடு கூட்டுக் குடிநீர் திட்டம். ரூ.283 கோடி செலவில் சேலம் மாநகராட்சிக்கென்று தனி குடிநீர் திட்டம்.
கரூர், இனாம் கரூர், தாந்தோணி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கும் சேர்த்து 75 கோடி ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்., கொடுமுடி மூலனூர் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மூலனூர் பேரூராட்சி வழியாக கன்னிவாடி வரை உள்ள கிராமங்கள் பயன்பெறும். வகையில் 22 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டது. 31 கோடி ரூபாய் செலவில் திருவண்ணாமலைக்கு 3வது கூட்டுக் குடிநீர் சிறுவாணி கூட்டுக் குடிநீர் திட்டம்…
கிருஷ்ணா நதிநீர் குடிநீர் திட்டம்
ரூ.200 கோடி செலவில் கண்டலேறு கால்வாயை சீர்படுத்தி சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் முறையாக கிடைக்கச் செய்தது.
கிருஷ்ணா நதிநீர் ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு வரக்கூடிய திட்டம் கண்டலேறு கால்வாய் பழுதடைந்து முறையாக நதிநீர் வந்து சேரவில்லை. அப்போது துணை முதல்வராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் அவர்களும் புட்டபர்த்தி சாய்பாபா அவர்களை நேரடியாக சந்தித்து அவரிடத்திலே 200 கோடி ரூபாய் நிதி உதவி பெற்று அதன் மூலம் கண்டலேறு கால்வாயை சீர்படுத்தி கிருஷ்ணா நதிநீர் முறையாக கொண்டு வந்தது. திமுக ஆட்சி.
இராமநாதபுரம் கூட்டுக் கூடிநீர் திட்டம்
இராமநாதபுரம் நீண்ட கடற்கரையைக் கொண்ட மாவட்டம் மட்டுமல்ல. மூன்று புறமும் கடலால் சூழப்பட்டுள்ளது. இதனால் தோன்றுகின்ற பக்கமெல்லாம் உப்பு தண்ணீராக இருப்பதால் மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளபடியால் கோடைக் காலத்தில் கடுமையாக குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அல்லல்பட்டு வந்தனர். இந்த இன்னலை போக்கிடும் வகையில் தலைவர் கலைஞரின் பொற்கால ஆட்சியில் 2007-ம் ஆண்டு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை ரூ.650 கோடி செலவில் தொடங்கி மாவட்ட மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். இத்திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை, திருமயம், திருப்பத்தூர், சிங்கம்புணரி, சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் வரையிலும் மேற்கே மாவட்டத்தின் கடைசி எல்லையான உச்சிநத்தம் வரையிலும் சிமெண்ட் குழாய்கள் மூலம் காவிரி குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இராமநாதபுரம் 4 நகராட்சி பகுதிகளுக்கு, 11 ஒன்றிய பகுதி மக்களுக்கும் சீரான முறையில் காவிரி குடிநீருக்கு முறையான வசதிகள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது…
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்
கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 2 மாவட்டங்களில் கிடைக்கும் தண்ணீரைக் குடிக்கக்கூடிய மக்களுடைய பற்கள் கெட்டும் கறுத்தும் போய் விடுகிறது. உடலிலே தோளிலே சொல்ல முடியாத நோய்கள் வருகிறது. 3 லட்சம் மாணவர்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இந்த ஆபத்திலிருந்து இந்த மாவட்ட மக்களை மீட்டு அவர்களின் குடிநீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்ப்பதற்காக 2006-ம் ஆண்டு 5வது முறையாக ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் கொண்டு வந்த திட்டம்தான் இந்த ஒகேனக்கல் கூட்டுக குடிநீர் திட்டம்…
உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் செயல் இயக்குநர் டிசி யோகுசி அவர்களுடன் 6.2.2008 அன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி நிதியை முழுமையாக பெற்று 1928 கோடி ரூபாய் செலவில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 26.2.2008 அன்று தர்மபுரியில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள். அதன்பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏறக்குறைய 25 முறை அந்த இரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைவுபடுத்தி 80 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில் 2011 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக பதவிக்கு வந்தது.
இந்த இரு மாவட்டங்களில் இருக்கக்கூடிய 3 மாநகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6752 கிராமங்கள் இவற்றில் வசிக்கும் 33 லட்சம் மக்கள் இதனால் பயன் அடைகிறார்கள். ஆட்சியில் இல்லாத போதும் இத்திட்டம் மேலும் காலதாமதம் ஏற்படாமல் குடிதண்ணீர் மக்களுக்கு கிடைப்பதற்காக திமுக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மக்களின் குடிதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை எழுதினால் இந்த ஏடு கொள்ளாது.
நதிநீர் இணைப்பு
தாமிரபரணி-கருமேனியாறு-பச்சையாறு-நம்பியாறு காவிரி- அக்னியாறு- கோரையாறு- பாம்பாறு- வைகை- குண்டாறு, கோதாவரி கிருஷ்ணா அணையைக் கட்டிய சர் ஆர்தர் கார்ட்டன் என்பவர் மிகத் தெளிவாக ஒன்றைச் சொன்னார்.
அதாவது “இந்தியாவில் இரயில்வே தொடர்புகள் ஏற்படுத்துவதை விட நீர்வழிச் சாலைகைள் அமைப்பதன் மூலமாக வெள்ளம் மற்றும் வறட்சிப் பேரிடர்களைத் தவிர்க்கலாம்;
பாசன வசதியைப் பெருக்கலாம், விளைபொருட்களை அதிகரிக்கலாம். என்பதே அவரது திடமான கருத்து. இவர்தான் நதிநீர் இணைப்பு என்ற உன்னதமான விதையை முதன் முதலாக ஊன்றியவர்.
மேலும், “ஒவ்வோர் ஆண்டும் வெள்ளத்தால் மட்டுமே 20 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் மூழ்கி சேதமடைகின்றன. நாட்டிலே 16 சதவிகிதம் மக்கள் வறட்சியால் வாடுகின்றனர். இந்தியா தன்னுடைய நீர் ஆதாரங்களில் 12 லட்சம் மில்லியன் கன அடி நீரில் 3 லட்சத்து 70 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. நதிநீர் இணைப்பின் மூலம் இந்த நீரை முறையாக திருப்பி விட்டால் ஆண்டொன்றுக்கு 35 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கும்.
35 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதிபெறும். 25 கோடி மக்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள். 15 ஆயிரம் கி.மீ தேசிய சீர் நெடுஞ்சாலை பெற முடியும். என்பதெல்லாம் அதனைத் தொர்ந்து அவர் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்கள்.
மேற்குறித்த சர் அர்தார் கார்ட்டன் அவர்களின் கருத்தையொட்டி, தமிழகத்தில் பாய்ந்தோடும் நதிகளை இணைத்து வெள்ளக் காலங்களில் பாய்ந்தோடி வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து பாசனத்திற்கும் குடிதண்ணீருக்கும் பயன்படுத்தலாமே, என்ற உயர்ந்த சிந்தனையோடு, தலைவர் கலைஞர் அவர்கள் திட்டங்களைத் தீட்டினார்கள்.
அதன் முதல் பகுதியாகத்தான் மேற்கண்ட இரண்டு நதிநீர் இணைப்பு திட்டங்களை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன் முதலாக உடனடியாக செயல்படுத்துவதற்கு 5வது முறை 2006-11 தமிழக முதல்வராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் முன்வந்தார்கள்.
புரட்சிகரமான இந்த முன்னோடி திட்டங்களுக்கு நிதி உதவி கோரி 29.5.2007-ல் டெல்லியில் நடைபெற்ற 53வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் நினைவூட்டினார்கள். தொடர்ந்து 11.2.2008 அன்று டெல்லியில் நடைபெற்ற 2008-2009க்கான திட்டக் கமிசன் கூட்டத்திலும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.
ஒரு வழியாக மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் அவர்கள் 22.2.2008 தேதியில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய திட்டக் கமிசன் ஒப்புதலோடு நீர்வள ஆதார அமைச்சகமும் கொடுத்துள்ள விதிமுறைகளின்படி மேற்குறித்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அறிவுப்பூர்வமாக சிந்தித்து விரைந்து முடிவெடுப்பதில் கலைஞர் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே. மத்திய அரசு நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அந்த நிதியை எதிர்நோக்கி ரூ.2180 கோடி திட்டச் செலவில் காவிரி- அக்னியாறு-கோரையாறு-பாம்பாறு- வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தை 2008-2009 நிதிநிலை அறிக்கையில் இடம்பெறச் செய்து முதற்கட்டமாக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் கதவணை அமைக்கும் பணியை உடனடியாக துவக்க ஆணையிட்டார்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலுள்ள சாத்தான் குளம், திசையன் விளை போன்ற வறண்ட பகுதிகளுக்குத் தாமிரபரணி ஆற்றின் உபரி வெள்ளநீர் கொண்டு செல்ல 369 கோடி ரூபாய் செலவில் இரண்டாவது திட்டமாக தாமிரபரணி கருமேனியாறு பச்சையாறு- நம்பியாறு இணைப்புத் திட்டத்தையும் 21.2.2009 அன்று தலைவர் கலைஞர் அவர்கள் பாளையங்கோட்டை விழாவில் தொடங்கி வைத்தார்கள்.
காவேரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான முதல்கட்ட பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சரும் துணை முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் அவ்வப்போது நேரடியாக களத்திற்கே சென்று தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு அப்பணிகளை விரைந்து முடிக்க தகுந்த அறிவுரைகளையும் வழங்கி வந்தார்கள்.
50 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் முதல்வர் பதவி ஏற்றவுடன் தலைவர் கலைஞர் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்த இரு திட்டங்களையும் கிடப்பில் போட்டு விட்டார். அத்துடன் நில்லாமல், 21.3.2014-ல் விருதுநகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள் 17 வருடங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த, திமுக நதிநீர் இணைப்புக்கு ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டதுண்டா, என கேள்வி கேட்டு பொய்த் தகவல்களை அள்ளி வீசினார்கள்.
ஆனால் இத்திட்டம் குறித்து 3.3.2014 தேதியிட்ட தினமலர் நாளிதழில் வெளிவந்த உண்மைச் செய்தி பின்வருமாறு நாளிதழில் வெளிவந்த உண்மைச் செய்தி பின்வருமாறு,
“திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏறத்தாழ 48 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி தரக்கூடிய தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம் 50 சதவிகிதம் பணிகள் மட்டுமே முடிந்த நிலையில் முடங்கியுள்ளது. தென் மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டிருக்கும் சூழலில், இத்திட்டத்தை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு சாத்தான்குளம் இடைத்தேர்தல் வெற்றி விழாவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். என்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மையார் உறுதி அளித்தார். ஆனால் நிறைவேற்றவில்லை.
பின் திமுக ஆட்சி காலத்தில் 2008-2009-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் 369 கோடி ரூபாயில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட பணிகளைத் தொடங்க கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2ந் தேதி 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த 2010-11-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலும், 2011-12-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலும் முறையே 41 கோடி ரூபாய் 107 கோடி ரூபாய் என மொத்தம் 213 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதனால் இத்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களும் திமுக ஆட்சியில் துரிதமாக முடிக்கப்பட்டன” என்றெல்லாம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இந்த திட்டங்களை நிறைவேற்ற திமுக ஆட்சியில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. என்று அபாண்டமாக குற்றம் சாட்டினார்.
தென் மாவட்ட மக்களின் கனவு திட்டமான கீரியாறு அணைக்கட்டு திட்டம்.
மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக பகுதியில் தோன்றி தமிழக மலைப்பகுதி வழியாக பாய்ந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளை வளமாக்கி இறுதியாக அரபிக் கடலில் கலந்து வீணாகிறது. கீரியாறு.
இந்த ஆற்றில் அணை கட்டி தண்ணீர் தேக்கி 500 மெகாவாட் மின்சார உற்பத்தி, குடிதண்ணீர் வசதி, திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் தாலுகா, சிவகிரி தாலுகா மற்றும் திருவேங்கடம், விருதுநகரின் வெம்பகோட்டை,, தூத்துக்குடி மாவட்டத்தின் வீளாத்திக்குளம் மற்றும் கோவில்பட்டி மற்றும் இராமநாதபுரத்தின் ஒரு சில பகுதிகள் என 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நீர்ப்பாசன வசதி செய்ய திட்டமிடப் பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீரையும் அதிகரிக்க முடியும்.
முதலில் இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் 1996 முதல் 2001 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்ததலைவர் கலைஞர் அவர்களின் விடாமுயற்சியால் இந்த திட்டத்திற்கு உயிரூட்டப்பட்டது. தேசிய நதிநீர் ஆணையம் மூலம் 13,000 கோடி ரூபாய் மதிப்பில் நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்திட திட்டமிடப்பட்டபோது, கீரியாறு அணைக்கட்டு திட்டத்தையும் மேற்கொள்ளும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.