சாலைகளும் மேம்பாலங்களும்
1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மொத்தம் 50 பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. ஆனால் 1967-75 வரையிலான 7 ஆண்டுகால திமுக ஆட்சியில் 80 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இவைகள் போக 1973-ல் சென்னையின் மையப் பகுதியில் அண்ணா மேம்பாலம் கட்டி போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைக்கப்பட்டது.
1967-ல் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது தில்லைநாயகம் தலைமையில் குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரையின் பேரில் சென்னையில் நிர்மாணிக்கப்பட்ட சாலைத் திட்டங்கள் பின்வருமாறு:
அ) ஆலந்தூர் கத்திப்பாரா-அசோக் நகர்-வடபழனி கோயம்பேடு அண்ணாநகர்- அம்பத்தூர் வழியாக ஆவடியை இணைக்கும் சென்னை உள் வட்ட சாலை (Chennai Inner Ring Road)/
ஆ சென்னை- திருச்சி ஜி-எஸ்.டி.சாலை, சென்னை. பெங்களூர் ஜி.டபிள்யு.டி. நெடுஞ்சாலை, சென்னை- நெல்லூர் ஜி.என்.டி. ஜி.டபிள்யு.டி. நெடுஞ்சாலை ஆகிய 3 நெடுஞ்சாலைகளை இணைக்கும் தாம்பரம் போரூர் மதுரவாயல் புழல் செங்குன்றம் வழியாக சென்னை புறவழிச் சாலை (Chennai Bye Pass Road)/
இ) வண்டலூர் குன்றத்தூர்- பூவிருந்தவல்லி பஞ்செட்டி மீஞ்சூர் வழியாக மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சென்னை வெளிவட்டச் சாலை (Chennai Outer Ring Road).
ரூ.22 கோடி செலவில் எம்.கே.என். சாலை மேம்பாலம். ரூ.128 கோடி செலவில் ஆலந்தூர் வேளச்சேரி இடையே உள் வட்ட சாலை ரூ.300 கோடி செலவில் வண்டலூர் வாலாஜாபாத் 4 வழிச்சாலை.
1996-2001 கழக ஆட்சியில் ரூ.292 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 247 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன. மேலும் 200 பாலப் பணிகள் அப்போது வேகமாக நடைபெற்று வந்தன.
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்தபோது மாநகராட்சி சார்பில் அடையாறு, காந்திமண்டபம், ஆழ்வார்பேட்டை, மியூசிக் அகடமி, ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர், பீட்டர்சாலை (சரவணபவன்), பீட்டர்சாலை (இராயப்பேட்டை மருத்துவமனை), எழும்பூர் மியூசியம் அருகில், புரசைவாக்கம் டவுட்டன், பெரம்பூர் ரயில்வே ஸ்டேசன் ஆகிய இடங்களில் 10 பெரிய மேம்பாலங்கள் (இதில் பெரம்பூர் மேம்பாலம் அடுத்தமுறை வந்த கழக ஆட்சியில் கட்டப்பட்டது) முடிக்கப்பட்டு கலைஞரால் திறந்து வைக்கப்பட்டன.
கலைஞர் 5வது முறை முதல்வர் பொறுப்பேற்ற போது சென்னையில் மேலும் 1) ஜி-கே.மூப்பனார் மேம்பாலம் 2) கோமதி நாராயண செட்டித் தெருவில் மேம்பாலம் 3) கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் அருகில் அமைந்துள்ள உஸ்மான் சாலை மேம்பாலம் 4) தியாகராய நகரில் குமரன் ஸ்டோர்ஸ் அருகில் உள்ள மேம்பாலம் ஆகிய 4 மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 1. மீனம்பாக்கம் சாலை மேம்பாலம் 2. கத்திபாரா பெரிய பாலம் 3. கோயம்பேடு மேம்பாலம் 4. பாடியில் உள்ள மேம்பாலம் 5.புழல் மேம்பாலம், 6. பூவிருந்தவல்லி மேம்பாலம் ஆகிய 6 மேம்பாலங்கள் சென்னையில் அமைக்கப்பட்டன.
வேளச்சேரி அருகில் காமாட்சி மருத்துவமனை அருகில் கட்டப்பட்ட மேம்பாலம். ஆகிய மொத்தம் 22 மேம்பாலங்கள் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய பேருதவிகளாக உள்ளன.
மேலும் 68 கோடி ரூபாய் செலவில் துரைபாக்கம் ரேடியல் சாலை மேம்பாலம் மற்றும் 72 கோடி ரூபாய் செலவில் குரோம்பேட்டை எம்.ஜ.டி மேம்பாலம் அமைக்கப்பட்டன.
மேலும் 2006-11 திமுக ஆட்சியில்
- ரூ.34.72 கோடி செலவில் போரூரில் மேம்பாலம்.
2.ரூ. 49.55 கோடி செலவில் மூலக்கடை பகுதியில் மேம்பாலம்.
- அண்ணாநகர் 2வது நிழற்சாலை மற்றும் திருமங்கலம் முகப்பேர் உள்வட்ட சாலை சந்திப்பில் ரூ.6.23 கோடி செலவில் ஒரு மேம்பாலம்.
- வடபழனி உள்வட்ட சாலை-என்.எஸ்.கே. சாலை சந்திப்பில் ரூ. 30 கோடி செலவில் ஒரு மேம்பாலம்.
- பெரியார் ஈவெ.ரா சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு மற்றும் அண்ணா வளையில் அண்ணாநகர் 3வது நிழற்சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.117 கோடி செலவில் மேம்பாலம் ஆகிய மேம்பாலங்களின் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. இவற்றில் அதிமுக ஆட்சிக்கு வந்த 2011 லிருந்து மூலக்கடையிலும் அண்ணாநகர் திருமங்கலம் ரவுண்டானா ஆகிய இடங்களில் அமைந்த 2 பாலங்கள் மட்டுமே முடிவடைந்துள்ளன. எஞ்சிய பாலங்கள் அதிமுக ஆட்சியில் முடங்கி கிடக்கின்றன.
கழக ஆட்சியில் பழைய மாமல்லபுரம் சாலை ரூ.205 கோடி செலவில் பிரம்மாண்டமாக புனரமைத்து அதற்கு ராஜீவ்காந்தி சாலை என பெயரிடப்பட்டது.
இந்த ராஜீவ்காந்தி சாலையில் உள்ள 1.திருவான்மியூர்-தரமணி-எஸ்.ஆர்.பி.டூட்ஸ் சந்திப்பு 3. அப்பல்லோ மருத்துவமனை உள்ள பெருங்குடி சாலை சந்திப்பு, 4. துரைப்பாக்கம்- பல்லாவரம் சாலை 5. சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு ஆகிய 5 சந்திப்புகளை மேம்படுத்துவதற்காக திமுக ஆட்சியில் அதற்காக ரூ.50 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு 2011-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசியல் இந்த பணிகளும் முடங்கி விட்டன.
திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 56 ஆயிரத்து 664 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 3276 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் 4 வழிச் சாலைகளாக மாற்றப்பட்டன…
ரூ.1828 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 90 ரயில்வே மேம்பாலங்கள் கழக ஆட்சியில்தான் மேற்கொள்ளப்பட்டன.
ரூ.1828 கோடி செலவில் சென்னை துறைமுகத்தையும் எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்கும் சாலையை அகலப்படுத்தும் பணியும் ரூ.780 கோடி செலவில் சேலம் மாநகராட்சியில் சிறப்பு சாலை திட்டம் பணிகளும்.
கோவை மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை
திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை
ரூ.1815 கோடி செலவில் துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை
திருவனந்தபுரம்-கன்னியாகுமரி சாலை.
விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை.
எண்ணூர்-மணலி சாலை
கிருஷ்ணகிரி-வாலாஜாபாத் சாலை
ஆகிய 7 ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசியல் தமிழகத்திற்கு கிடைக்கப் பெற்றவை. இந்த பணிகளை அடுத்து 2011-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு முடக்கி வைத்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளர் ஜி-ஜி.ரெட்டி தெரிவிக்கிறார்.
17 1. திருமயம் முதல் மானாமதுரை வரை என்.எச். 226-ல், ரூ.252 கோடி செலவில் 77.7.கி.மீ தூர சாலை. 2. தஞ்சாவூர் முதல் புதுக்கோட்டை வரை என்.எச்.226ல், ரூ.159 கோடி செலவில் 55.2.கி.மீ தூர சாலை, 3. காரைக்குடி முதல் இராமநாதபுரம் வரை என்.எச்.210-ல், ரூ.280 கோடி செலவில் 80 கி.மீ தூர சாலை 4. மதுரை முதல் இராமநாதபுரம் வரை என்.எச். 49.ல், ரூ.734 கோடி செலவில் 115.80 கி.மீ தூர சாலை 5. நாகப்பட்டினம் முதல் தஞ்சாவூர் வரை என்.எச்.67-ல், ரூ.415 கோடி செலவில் 115.80 கி.மீ தூர சாலை, இந்த பணிகள் 2011-16 அதிமுக அரசின் ஒத்துழைப்பு இல்லாத நிலையில் அப்படியே கிடப்பில் உள்ளன.
14600 கோடி ரூபாய் செலவில் சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 45 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரெயில் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய திட்டம்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்
சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க ஒரு நீண்டகால தீர்வாக 14600 கோடி ரூபாய் செலவில் 45 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரெயில் அமைப்பதென 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள். இதில் 24.கி.மீ தூரத்திற்கு சுரங்க பாதையும் 21 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் பாதையும் அடங்கும்.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக “சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட்” என்கிற சிறப்புவகை பொதுத்துறை நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி இந்திய கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 3.12.2007 அன்ற பதிவு செய்தது.
இந்த திட்டத்தைப் பொறுத்தவரையிலே உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களும், அதிகாரிகளும் 7.2.2008 அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று அங்குள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் (Japan International Co-Operation Agency)பேச்சுவார்த்தை நடத்தி நிதியுதவி பெற்று வந்தார்.
அதன் அடிப்படையில் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் 2.11.2008 அன்று மத்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே கையெழுத்தானது. மத்திய மாநில அரசுகளின் நிதி 41 சதவிகிதம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி 59 சதவிகிதம் என்று அந்த திட்டம் உருவானது. 28.1.2009 அன்று டெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவும் இத்திட்டத்திற்கான இறுதி ஒப்புதலை வழங்கியது.
இந்த ரெயில் திட்ட கட்டுமானப் பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களும் தமிழக அரசு தலைமைச் செயலாளரோடு கோயம்பேடு சென்று 10.6.2009 அன்று தொடங்கி வைத்தார்கள்.
வண்ணாரப்பேட்டையிலிருந்து விமானநிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பாதையும், சென்ட்ரலிலிருந்து பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பாதையும் என இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்படுகினறன.
இந்த இரண்டு வழித்தடங்களிலும் 19 சுரங்க ரயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 33 ரயில் நிலையங்கள் அமையப்பெற்று உள்ளன. திமுக 2006-11 ஆட்சிக் காலத்தில் வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியுர் வரை 9 கிலோ மீட்டர் மெட்ரோ ரெயில் பாதையை நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்த நேரத்தில் அதனை ஏற்று 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுக அரசு அதற்கான கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதுவும் விரைவில் நிறைவேறும்.
முதல்கட்டமாக கோயம்பேட்டிலிருந்து புனிததோமையார் மலை வரை 11 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலத்தில் 29.6.2015 அன்று முதல் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் சுரங்க பாதையில் முழுமையான பாதுகாப்பு வசதிகள் பயணிகளுக்குச் செய்யப்படும். 100 அடிக்கு ஒரு தொலைபேசி; ஒரு தீயணைப்பு கருவி; தீ அல்லது எந்தவிதமான விபத்து ஏற்பட்டாலும் சுரங்கத்தில் மெட்ரோ ரெயில் உடனடியான நிறுத்தப்படும். சுரங்கத்தின் ஒவ்வொரு 250 மீட்டர் தொலைவிலும் அவசர வழி அமைக்கப்படும். பயணிகள் ஆபத்து காலத்தில் ரயிலில் இருந்து இறங்கி 250 மீட்டர் தூரத்தில் உள்ள அவசர வழி மூலம் பக்கத்து சுரங்கத்திற்கு சென்றுவிடும் வகையில் கட்டுமானம் அமைக்கப்படுகிறது. பின்பு பக்கத்து சுரங்கத்திலிருநது அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு சென்று விடலாம்.
இந்த மெட்ரோ ரெயில் திட்டம் என்பது திமுகவின் சாதனைகளில் ஒரு மைல் கல் என்றால் அது மிகையல்ல.
சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட பறக்கும் சாலை
துறைமுகம் என்பது வாணிபத்தின் நுழைவு வாயில்; நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளம்; நாட்டின் வளர்ச்சிக்கும் தேவையான சென்னை துறைமுகத்தின் வர்த்தகம் ஆண்டுக்காண்டு 8 சதவிகிதம் குறைந்து வருவதாக நிபுணர்கள் கணித்தனர்.
இப்படி சரிவை நோக்கி வேகமாகச் செல்லும் சென்னை துறைமுகத்தின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காகவே மேற்குறித்த சென்னை துறைமுக மதுரவாயல் உயர்மட்ட பறக்கும் சாலைத் திட்டம் ஒன்றை மத்திய அரசு ஒப்புதலோடு 2006-11 கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்.
இது குறித்த விபரங்கள் கீழ்வருமாறு:
சென்னைக்கு துறைமுகம் மூலம், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், ரசாயன மற்றும் மருந்து பொருட்கள் உள்பட பல சரக்குகள் இங்கிருந்து ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் என பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. அதேபோல் பல்வேறு நாடுகளிலிருந்து மோட்டார் உதிரி பாகங்கள், மின்னணு பொருட்கள் உணவுப் பொருட்கள் இறக்குமதியாகின்றன. தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் இந்த துறைமுகத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஏற்றுமதியாகும் பொருட்களை சென்னை துறைமுகத்திற்குள் கொண்டு சேர்ப்பதற்கும், இறக்குமதியாகும் பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்கும் என ஆண்டொன்றுக்கு 20 லட்சம் கண்டெய்னர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு மாதம் ஒன்றுக்கு 6000 கோடி ரூபாய் வர்த்தகம் இங்கு நடைபெறுகிறது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக சரக்கு கண்டெய்னர்கள் இங்கிருந்து 9 கி.மீ தூரத்திலுள்ள எர்ணாவூரிலிருந்து சென்னை துறைமுகத்தை வந்தடைய ஒரு நாளைக்குமேல் ஆகிறது. இதனால் குறிப்பிட்ட கப்பலில் சரக்குகளை ஏற்றுவதற்குள் அந்த கப்பல் புறப்பட்டு சென்று விடுவதால் ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதேபோல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை துறைமுகத்திலிருந்து உபயோகிப்பவரைச் சென்றடைய ஏற்படும் கால தாமதத்தில் அந்த உணவுப் பொருட்கள் கெட்டுப்போய் இறக்குமதியாளர்களுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக இறக்குமதியாளர்கள் சரக்கை முன்கூட்டியே வாங்கி வைப்பதில்லை. தேவைப்படும் நேரத்தில் தேவையான அளவுக்கு மட்டுமே வாங்குகின்றனர். இதனால் அவர்கள் கேட்கும் காலத்திற்குள் இங்கிருந்து ஏற்றுமதியாளர்களால் சரக்குகளை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை.
இந்நிலையில் சென்னையிலிருந்து கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகம் சென்றடைய 4 மணி நேரமே ஆவதால் சென்னை துறைமுகத்தை தவிர்த்து விட்டு கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகத்தை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். இதனால் சென்னை துறைமுகத்தில் நடைபெறும் வர்த்தகம் ஆண்டுக்காண்டு 8 சதவிகிதம் குறைந்து கொண்டே வருவதாகவும், சென்னை துறைமுகம் முடங்கும் அபாயம் உள்ளதாகவும் ஏற்றுமதி/ இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மத்திய அரசு ஒப்புதலுடன் ரூ.1500 கோடி செலவில் மதுரவாயலிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு உயர்மட்ட பறக்கும் சாலைத் திட்டம் ஒன்றை 2006-11ல் கழக ஆட்சி அமைந்தபோது முதல்வர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்கள். அப்போதைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இந்த திட்டத்திற்கு சென்னையில் 8.1.2009 அன்று அடிக்கல் நாட்டினார்கள்.
2010 செப்டம்பரில் பணிகள் தொடங்கின. மொத்தம் 889 தூண்களில் 120 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. இதில்15 தூண்களில் சாலை அமைப்பதற்கான மேற்பரப்பும் கட்டப்பட்டு விட்டது.
இந்நிலையில் 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் முதலமைச்சராக ஆட்சியில் அமர்ந்ததும் கூவம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 15 தூண்கள் ஆற்றின் நீரோட்ட தன்மையை பாதிக்கும் என குற்றஞ்சாட்டி மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் முடக்கிப் போட்டு விட்டார்கள்.
இத்திட்டம் மக்களுக்கும் நாட்டுக்கும் பயனுள்ள திட்டமாகும் என்று உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றமும் பிஜேபி மத்திய அரசு அதிகாரிகளும் எவ்வளவோ கூறியும் கலைஞர் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இந்த திட்டத்தை 2015ல் பெய்த கனமழை காரணமாக வரலாறு காணாத அளவு மழைவெள்ளம் கூவம் ஆற்றில் கரைபுரண்டு ஓடியது. இங்கு அமைக்கப்பட்டிருந்த 15 தூண்களால் அந்த நீரோட்ட தன்மைக்கு எந்த குந்தகமும் ஏற்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.
இத்திட்டம் நிறைவேறினால் திமுகவுக்கு நல்ல பெயர் வந்து விடுமே என்ற கவலைதான் அம்மையாருக்கு பெரியதாக இருந்ததேயொழிய, மக்களுக்கு/நாட்டுக்கு நன்மை தரும் திட்டமாயிற்றே என்ற எண்ணம் கிஞ்சிற்றும் கிடையாது.
அதனால்தான், தலைவர் கலைஞர் அவர்கள், “அதிமுகவுக்கு கடந்த தேர்தலில் வாக்களித்ததால் ஏற்பட்ட நன்மைகளில் இதுவும் ஒன்று” என மனம் வருந்தி தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைமலை நகர் முதல் பெருங்களத்தூர் வரை தினசரி கடும் வாகன நெரிசல்
வண்டலூரில் சென்னை வெளிவட்ட சாலையும் ஜி.எஸ்டி சாலையும் சந்திக்குமிடத்தில் 54 கோடி ரூபாய் செலவில் இரயில்வே மேம்பாலம்.
சிங்கபெருமாள் கோவில் ஓரகடம் திருப்பெரும்புதூர் சாலையில் சிங்கபெருமாள் கோவிலில் 53 கோடி ரூபாய் செலவில் இரயில்வே மேம்பாலம்.
கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் சாலையில் 29 கோடி ரூபாய் செலவில் இரயில்வே மேம்பாலம்.
ஓட்டேரி மண்ணிவாக்கம் சாலையில் 35 கோடி ரூபாய் செலவில் இரயில்வே மேம்பாலம்-இந்த 4 பணிகளும் 2006-20011 கலைஞர் ஆட்சியில் வேகமாக நடைபெற்று வந்தன.
மேலும் ஜி.எஸ்டி நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கணக்கில் கொண்டு கூடுவாஞ்சேரியில் நெல்லிக்குப்பம் சாலை சந்திப்பில் உயர்மட்ட பாலம் அமைத்திடவும், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகில் கேளம்பாக்கம் சாலை சந்திப்பில் உயர்மட்ட பாலம் அமைத்திடவும் கலைஞர் ஆட்சியில் திட்டமிடப்பட்டன.
பெருங்களத்தூர் ரயில்வே லெவல் கிராசிங்கில் ரயில்வே சுரங்க பாதையும், பீர்க்கன்கரணை ரயில்வே லெவல் கிராசிங்கில் ரயில்வே மேம்பாலமும் அமைத்திடுவது என்றும் கலைஞர் ஆட்சியில் திட்டங்கள் தீட்டப்பட்டன.
இந்த பணிகள் எல்லாம் முடிக்கப்படாத காரணத்தால் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன.