அரசு அலுவலர்கள்
ஆசிரியர்கள்
அரசு அலுவலர்களுக்கான நடத்தை பற்றிய ரகசியக் குறிப்பேடு முறை ஏப்ரல் 1972 முதல் ஒழிக்கப்பட்டது.
அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் திடீரென இறந்து விட்டால் அவர் குடும்ப பாதுகாப்புக்காக உடனடியாக ரூ.10000 கருணை கொடையாக வழங்கிடும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக கழக ஆட்சியில்தான் வரப்பட்டது. இதுதான் இன்றைய நிலையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க வழங்கும் குடும்பநல பாதுகாப்பு திட்டமாகும்.(FBF).
அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவர்கள் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசுத் துறைகளில் பணி நியமனம் வழங்கும் திட்டம் 1972 பிப்ரவரி 15-ம் நாள் முதற்கொண்டு இந்தியாவிலேயே கழக ஆட்சியில்தான் முதன்முதலாக கொண்டு வரப்பட்டது.
1969-ல் அரசு அலுவலர்களுக்கு ஆண்டுக்கொரு முறை 15 நாள் ஈட்டிய விடுப்பை அரசுக்கு சரண்டர் செய்து காசாக்கும் திட்டம் கழக ஆட்சியில்தான் முதன் முதலாக கொண்டு வரப்பட்டது.
திருமணக் கடன், வாகனக் கடன், வீடுகட்ட கடன் ஆகியவை கழக ஆட்சியில்தான் அமுல்படுத்தப்பட்டது.
7.2.1990 முதல் அரசு அலுவலகங்களில் வாரத்தில் 5 நாள் வேலை திட்டம்; சனி, ஞாயிறு அரசு விடுமுறை என கழக ஆட்சியில் அமுலானது.
கலைஞர் ஆட்சியில் ஒரு அரசு ஊழியரின் மாத சம்பளத்தில் 75 ரூபாய் மட்டுமே பிடித்தம் செய்து கொண்டு 2 லட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி வழங்கும் “புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்” கொண்டு வரப்பட்டது. இதைத்தான் 2012 அதிமுக ஆட்சியில் 4 லட்சமாக உயர்த்தியிருக்கிறார்கள் அவ்வளவு தான். இதில் அதிமுகவின் சாதனை என்று எதுவுமே இல்லை. இந்த அற்புதமான திட்டத்தை முதன் முதலாக கலைஞர் அறிமுகம் செய்து வைத்தாரே அதுதான் உண்மையான சாதனை.
6 மாதத்திற்கொருமுறை மத்திய அரசு அலுவலர்களுக்கு பஞ்சப்படி உயர்த்தும் போதெல்லாம், தமிழக அரசு அலுவலர்களுக்கும் மத்திய அரசுக்கிணையான பஞ்சப்படியை நிலுவைத் தொகையும் தாமதமின்றி கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்டு வந்தது.
அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைத் தொகையை கலைஞர் ஆட்சியில் தான் போனசாக அறிவிக்கப்பட்டது.
ஒளிவுமறைவற்ற உண்மையான கலந்தாய்வு நடத்தி யார் தலையீடும் இல்லாமல். கலைஞர் ஆட்சியில் அரசு அலுவலர்கள் அனைத்து பிரிவினருக்கும் மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன.
அரசுப் பணியில் சேருவதற்குரிய அதிகபட்ச வயது வரம்பில் மேலும் 5 ஆண்டுகளை உயர்த்தி கழக ஆட்சியில் ஆணை வெளியிடப்பட்டது.
கழக ஆட்சியில்தான் சீனியாரிட்டி அடிப்படையில் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
கழக ஆட்சியில் 10000 சாலைப் பணியாளர்களையும் 7000 மக்கள் நலப் பணியாளர்களையும் நியமனம் செய்து வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் இவற்றில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் இவர்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும். ஊர்திப் படி 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி கழக ஆட்சியில் 1.10.2010 முதல் வழங்கப்பட்டது.
1968-ல் உயர்கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கப்பட்டன.
அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பண்டிகை முன்பணத்திற்கு ½ சதவிகித வட்டி இருந்தது; அது கழக ஆட்சியில் தான் ரத்து செய்யப்பட்டது.
மருத்துவ விடுப்பு அரை சம்பளத்தில் 6 மாதங்களாக என்றிருந்ததை கழக அரசில் முழு சம்பளத்தோடு 18 மாதங்களாக உயர்த்தி வழங்கப்பட்டது.
திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் வேலை நிதி ஊதிய நிறுவனத்தில் பணிபுரிந்த 6000 சாலை ஆய்வாளர்களை 1976 முதல் நிரந்தர நிறுவனத்திற்கு கொண்டு வந்து ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்பட்டன. மேலும் நெடுஞ்சாலைத் துறையிலும் பொதுப்பணித் துறையிலும் பணிபுரிந்து வந்த எஞ்சிய 50000 வேலை நிதி ஊதிய நிறுவன ஊழியர்களைப் பொறுத்தமட்டில் அவர்களது பிரச்சினை அடுத்த படஜெட்டில் சேர்க்கலாம், என கலைஞர் அனுமதித்திருந்தார். அதற்குள் ஆட்சி கலைக்கப்பட்டதால் அந்த பட்ஜெட் பார்லிமெண்ட்டில் தாக்கல் செய்யப்பட்டபோது (ஏற்கனவே, கலைஞர் ஆட்சியில் இருந்தபோது எடுத்த முடிவின்படி ) அந்த 50000 ஊழியர்களை 1.1.77 முதல் நிரந்தரம் செய்து அவர்களுக்கும் ஓய்வூதிய சலுகைகள் விஸ்தரிக்கப்பட்டன.
2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.
சத்துணவு மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு குடும்பநல பாதுகாப்பு திட்டம் விஸ்தரிக்கப்பட்டது.
சத்துணவு பெண் பணியாளர்களுக்கு பிரசவ விடுப்பு அனுமதிக்கப்பட்டது.
ஓய்வுகால பணிக்கொடை உச்சவரம்பு 1.4.95 முதல் ஒரு லட்ச ரூபாய் என்பது 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகவும், 1.1.96 முதல் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகவும், 1.1.2006 முதல் 10 லட்ச ரூபாயாகவும் கழக ஆட்சிகளில் உயர்த்தப்பட்டு வந்திருக்கிறது.
பணியிலிருக்கும் அரசு அலுவலர்கள் எத்தனை சதவிகிதம் பஞ்சப்படி பெறுகிறார்களோ, அதே விகிதத்தில் ஓய்வூதியதாரர்களுக்கும் பஞ்சப்படி வழங்கி கலைஞர் ஆட்சியில் ஆணையிடப்பட்டது.
அரசு பணியில் உள்ள குடும்ப ஓய்வூதியதாரர் ஒருவருக்கு மாத சம்பளத்தில் பெறும் பஞ்சப்படி அல்லது ஓய்வூதியத்தில் பஞ்சப்படி இதில் ஏதாவது ஒன்று மட்டுமே அனுமதிக்க முடியும். என்பதை மாற்றி கழக ஆட்சியில் இரண்டும் வழங்கப்பட்டது.
1997-ல் ஓய்வுபெறும் போது ஒப்படை செய்யும் ஆறுமாத கால ஈட்டிய விடுப்பினை 8 மாதமாக அதிகரித்து அதற்கேற்ப வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியும் கலைஞர் ஆட்சியில் அனுமதிக்கப்பட்டது.
தனிப்பட்ட அலுவலக்காக அளிக்கப்படும் ஆறுமாத அரைச்சம்பளத்துடன் கூடிய விடுப்பினை ஓய்வுபெறும் போது ஒப்படை செய்தால் 3 மாதங்களுக்கு முழு ஊதியமும் மற்றும் பிற படிகளும் வழங்கும் சலுகையும் கழக ஆட்சியில்தான் அனுமதிக்கப்பட்டது.
முழு ஓய்வூதியம் பெற 33 ஆண்டுகள் பணி செய்திருக்கி வேண்டும். என்பதை தளர்த்தி அதை 30 ஆண்டுகளாக குறைத்து அரசு அலுவலர்களுக்கு அனுகூலம் செய்து கழக ஆட்சியில் உத்தரவிட பட்டது.
36 மாதங்களின் சராசரியை கணக்கிட்டுதான் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. அதனை கழக ஆட்சியில் 26.2.70 முதல்12 மாதங்களாகவும் பின்னர் 10 மாதங்களாகவும் மாற்றப்பட்டது. கடைசியாக ஓய்வுபெறும் நாளன்று பெறும் அடிப்படை ஊதியத்தில் 50 விழுக்காடு அல்லது கடைசி 10 மாத கால சராசரி ஊதியத்தில் 50 விழுக்காடு இதில் எது அதிகமோ அந்த தொகையை 1.7.76 முதல் ஓய்வுதியமாக கணக்கிடும் முறை கழக ஆட்சியில் அமுல்படுத்தப்பட்டது.
ஓய்வூதியத்தை தற்போதுள்ள 50 சதவிகிதத்திலிருந்து படிப்படியாக உயர்த்தி 95 வயதுக்கு மேல் 100 சதவிகிதமாக அதாவது அவரது பணிக் காலத்தில் பெற்று வந்த முழு சம்பளத்தை ஓய்வூதியமாக உயர்த்தி வழங்கி கலைஞர் ஆட்சியில் அரசாணை 7.2.2011-ல் வெளிடப்பட்டது.
1974-ல் தமிழாசிரயர்களிடையே இருந்து வந்த முதல்நிலை இரண்டாம் நிலை என்ற பாகுபாடுகள் கழக ஆட்சியில் அகற்றப்பட்டது.
தமிழாசிரியர்கள் பெற்ற புலவர் பட்டயம் கழக ஆட்சியில் பி.லிட் பட்டமாக மாற்றப்பட்டது.
கழக ஆட்சியில் ஆசிரியர் பயிற்சி முடித்த ஆயிரக்கணக்கானோர் அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள சீனியாரிட்டிபடி ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்து வீடு தேடி உத்திரவு வந்தது.
2006-11 கழக ஆட்சியில் 45 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
1970-ம் வருடத்தில் தனியார் பள்ளிகள்/உள்ளாட்சி நிறுவன பள்ளிகள் இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கழக ஆட்சியில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமுதல்படுத்தப்பட்டது.
நல்லாசிரியர் விருது என்பதை டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது என பெயர் மாற்றியதுடன் விருது தொகை 500 ரூபாய் என்பதை 1989 1000 ரூபாய், 1997ல் 2000 ரூபாய், 2008ல் 5000 ரூபாய் என உயர்த்தி வழங்கப்பட்டது.
1997ல் 10 ஆண்டுகள் பணி முடித்திருந்தால் தேர்வு நிலையும், 20 ஆண்டுகள் பணி முடித்திருந்தால் சிறப்பு நிலையும், 30 ஆண்டுகள் முடித்திருந்தால் ஒரு கூடுதல் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.
5வது ஊதியக்குழு மறுத்த தேர்வு நிலை/சிறப்பு நிலை ஊதியங்கள் மீண்டும் கழக ஆட்சியில் வழங்கப்பட்டது.
கழக ஆட்சியில்தான் 1989ல் மத்திய அரசுக்கு இணையாக சம்பள விகிதங்கள் மாநில அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது.
2.10.70 முதல் 21 கோடி ரூபாய் செலவிலும், 1.1.88 முதல் 430 கோடி ரூபாய் செலவிலும் 1.1.96 முதல் 1230 கோடி ரூபாய் செலவிலும், 1.1.2006 முதல் 5156 கோடி ரூபாய் செலவிலும் என 19 ஆண்டுகால முதலமைச்சர் பொறுப்பிலிருந்த கலைஞர் நான்கு முறை சம்பளக் குழு பரிந்துரைகளை அமலாக்கினார்கள்.
அதிமுக ஆட்சியில் 5வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையிலான 60 விழுக்காடு ஊதிய நிலுவைத் தொகையை அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்காமல் 5 ஆண்டு காலத்திற்கு வட்டி ஏதுமில்லாமல் இருப்பில் வைக்கப்பட்டது. தலைவர் கலைஞர் 2006-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததும் அந்த 60 விழுக்காடு நிலுவைத் தொகையை 2006-ம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டு சம தவணைகளில் வட்டியுடன் முதல் தவணை31.7.2006-ல் வழங்கினார்.
மத்திய அரசுக்கிணையாள சம்பளக் குழுவில் ஏற்பட்ட சரிவை சரிகட்ட இரண்டாவது முறையாக 5 சதவிகித சிறப்பு ஊதியம் கழக அரசியல் வழங்கப்பட்டது.
6வது சம்பளக் குழுவில் அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் நிலுவைத் தொகையாக அனுமதிக்கப்பட்டு ரொக்கமாக வழங்கி அரசு அலுவலர் வாழ்வில் கலைஞர் புதிய வரலாறு படைத்தார்.
6வது சம்பளக் குழுவில் ஊதிய முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய் செலவில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டன.
மேலும் 2 லட்சம் அரசு அலுவலர்கள்/ ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவில் ஒரு நபர் குழு ஊதியப் பரிந்துரைகளை 1.8.2010 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கழக ஆட்சியில்தான் 1.10.1967 முதல் நகர ஈட்டுப்படி வழங்கப்பட்டது.
1967 டிசம்பரில் இருந்து உதவை, குன்னூர், கோடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் பணிபுரிவோருக்கு குளிர்காலபடியும்; மலைப் படியும் வழங்கப்பட்டது.
விடுப்பு ஊதியத்தை கணக்கிட 12 மாத சராசரி ஊதியம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். என்பதை தளர்த்தி 12.7.68 முதல் 10 மாதமாக குறைத்து அதையும் நீக்கி கடைசி மாதம் பெறும் ஊதியத்தையே வழங்கியது.
ஓய்வு பெறும்போது அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 14 மாத சம்பளம் எனும் பணிக்கொடை 2.5.74 முதல் 16 மாதங்களாக பின்னர் அதிகப்படியாக 161/2 மாதங்களாக உயர்த்தப்பட்டது…
காவல்துறை
மூன்றாவது காவல் ஆணையம் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு அது வழங்கிய 444 பரிந்துரைகளில் இதுவரை 278 பரிந்துரைகள் ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு பதிவறை எழுத்தருக்கு இணையாக இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சம்பள விகிதத்தை திமுக ஆட்சியில்தான் இளநிலை உதவியாளர் அளவிற்கு உயர்த்தி வழங்கப்பட்டது. இவைகளை எல்லாம் போலீசார் மறந்திருந்தாலும் சரித்திரம் மறக்காது.
போக்குவரத்து அரசுடமை
பேரறிஞர் அண்ணா சமர்ப்பித்த முதல் பட்ஜெட் அறிக்கையிலேயே போக்குவரத்து துறையில் 75 மைல்களுக்கு மேற்பட்ட பஸ் ரூட்டுகளை அவை காலாவதி ஆக ஆக நாட்டுடமை ஆக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு அது செயலாக்கியது.
1969 மார்ச் வரை 380 பஸ்ரூட்டுகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. 1969-70ல் மேலும் 60 பஸ் ரூட்கள் அரசுடமையாக்கப்பட்டன. ஆக சுமார் 440 பஸ் ரூட்டுகள் அரசினால் எடுத்துக் கொள்ளப்பட்டன.
1.5 லட்சம் தொழிலாளர்கள் தனியார்களிடம் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்தனர். கழக ஆட்சியில்தான் அவர்கள் அரசு போக்குவரத்து ஊழியர்களாக்கப்பட்டனர். அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் தற்போது பெற்று வரும் நிலை உள்ளது. தாங்களும் அரசு ஊழியர்களே என அவர்கள் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ முடிகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாக இருபது ஆயிரம் பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 98 லட்சம் மக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் இன்றைக்கு பிரயாணம் செய்கிறார்கள்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களைப் போல ஓய்வூதிய சலுகைகளை வழங்கியவர் தலைவர் கலைஞர்.
பேருந்து செல்லாத இடங்களுக்கு திமுக ஆட்சியில்தான் மினி பேருந்துகள் விடப்பட்டன.
ஆனால் அதிமுக 2011-16 ஆட்சியில் பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது. குறிப்பிடத்தக்கது.
5 ஆண்டு கால ஆட்சி முடியும் தருவாயில் பிப்ரவரி 2016ல் அதிமுக அரசு சென்னையில் மட்டும் 60 வயது கடந்த மூத்த குடிமக்களுக்கு மாதமொன்றுக்கு இலவச பஸ் பாஸ் 10 டோக்கன்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதானது. வரும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்கான தந்திரமே தவிர வேறொன்றுமில்லை.