உள்ளாட்சி அமைப்புகள்
ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டன.
அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்கள் உதயம், தருமபுரி மாவட்டத்தில் அரூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம், திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய 3 புதிய கோட்டங்கள் உதயம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டாரம்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், திருவள்ளூர் மாவட்டம் மாதவரம், கரூர் மாவட்டம் தரகம்பட்டியைத் தலைமை இடமாகக் கொண்டு கடவூர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, வேலூர் மாவட்டம் ஆமபூர், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர், சோழிங்கநல்லூர் என 9 புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகளில் கட்டமைப்பு வசதிகளுக்கு நிதியுதவி
2549 கோடி ரூபாய் செலவில் 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 280 கோடி ரூபாய் செலவில் 561 பேரூராட்சிகளில் கட்டமைப்பு பணிகளும் நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் தலா 75 லட்சம் ரூபாய் செலவில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட அவை அரசுக்கு செலுத்த வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிர்வு 2006-07-ல் 8 விழுக்காடு அதாவது 2734 கோடி ரூபாய், 2008-09ல் விழுக்காடு அதாவது 2959 கோடி ரூபாய், 2009-10ல் 9.5 விழுக்காடு அதாவது 3316 கோடி ரூபாய், 2010-11-ல் 10 விழுக்காடு, 4030 கோடி ரூபாய் கழக ஆட்சிக் காலங்களில் வழங்கப்பட்டுள்ளது.