மாற்றுத்திறனாளிகள்
ஊனமுற்றவர்கள் உடலளவில் ஊனமுற்றவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் உள்ளம் ஊனமுற்று இருக்க கூடாது, என்று சொல்லி மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை தந்து அவர்களுக்கென தனி துறையையும், நல வாரியத்தையும் உருவாக்கி அவர்களின் நலன் காத்தது தலைவர் கலைஞர் அரசு.
ஆசியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னைக்கு அருகில் தேசிய மையங்கள் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.200லிருந்து ரூ.500 என உயர்த்தப்பட்டது. இதனால் 10000 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கட்டணங்கள் ரத்து, திருமண நிதியுதவி, அரசுப் பேருந்தில் துணையாளருடன் பயணம் மேற்கொண்டால் ¼ சதவிகித கட்டண சலுகை, அரசு ஊழியர்களாயின் அவர்களது பயணப்படி ரூ.150லிருந்து ரூ.1000 ஆக உயர்வு, இந்தியாவிலேயே முதல் முறையாக இலவச மூன்று சக்கர ஸ்கூட்டர், அரசு வேலை வாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு சிறப்பாணை, உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோருக்கு சிறப்பு விடுமுறை,
வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் மற்றும் சமத்துவபுரங்களில் 3 சதவிகித வீடு ஒதுக்கீடு செய்தல், தொகுப்பூதியத்தில் 2 ஆண்டுகள் பணி நிறைவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியமுறை வழங்கி பணி நிரந்தரம்/ காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நவீன காதொலி கருவி, நவீன கணினி பயிற்சி, சிறப்பு பள்ளி விடுதிகளில் தங்கி படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இரண்டு மடங்கு உணவுக் கட்டணம், பார்வையற்றவர்களுக்கு நவீன கைக் கடிகாரமும், ஒளிரும் மடக்கு குச்சியும் வழங்கியுது,
கால்கள் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால் வழங்கியது, நல வாரியம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்தில் சிக்கி படுகாய மடைந்தவர்களுக்கு அதிகபட்சம் ரூ.1லட்சம் வழங்கியது, மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை வழங்கியது போன்ற எண்ணற்ற சலுகைகளை வழங்கி தலைவர் கலைஞர் அவர்கள் மாற்றுத் திறனாளிகளின் காவலராக விளங்குகிறார்.
அத்துடன் தொண்டு நிறுவன சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கியது. தொண்டு நிறுவனம் நடத்தும் சிறப்பு பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிட வசதி மேற்கொள்ள நலவாரியத்தின் மூலம் ரூ.5 லட்சம் வழங்கியது கலைஞர் அரசுதான்.
மேலும் தனது திரைக்கதை வசனம் மூலம் ஈட்டிய ரூ.45 லட்சத்தை மாற்றுத்திறனாளி துறைக்கு வழங்கி பயன்பெற செய்தது. ஒவ்வொரு டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை வீட்டிற்கு வரவழைத்து அனைவருக்கும் அன்றைய தினத்தில் வாழ்த்துக் கூறி நலத்திட்டங்களை வாரி வழங்குவது தலைவர் கலைஞர் மட்டுமே.
ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகள் 29.5.2010 அன்று சென்னையில் உண்ணாவிரதம் இருந்து பின்னர் அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் மருத்துவமனைக்கு ஓடோடி சென்று பார்த்து அவர்கள் கோரிக்கையினை கேட்டறிந்து உடனடியாக 90 பேருக்கும் கருணை அடிப்படையில் சம்பந்தப்பட்ட விதிகளைத் தளர்த்தி ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கி அவர்களை பெருமகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
ஆனால் 2014-ல் அதிமுக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக போராடிய மாற்றுத்திறனாளிகளை கைகால், கண்பார்வை இழந்தவர்கள், என்றும் பாராமல் போலீஸை விட்டு அடித்து உதைத்து மருத்துவமனையில் தூக்கிப் போட்டனர். அப்போது கலைஞர் அவர்களோ கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஆறுதல் கூறச் செய்தார். இது தான் கலைஞரின் உண்மையான தாயுள்ளம்.
திருநங்கைகள்
சமுதாயத்தில் கேலிக்குள்ளாயிருக்கும் அரவாணிகளுக்கு திருநங்கைகள் என பெயர் சூட்டி அவர்கள் கவுரமாக வாழ வழி செய்தவர் தலைவர் கலைஞர்.
15.4.2008 அன்று தமிழ்நாடு அரவாணிகள் நலவாரியத்தை கலைஞர் உருவாக்கித் தந்தார். இந்த வாரியத்தின் மூலம் 2008-09-ல் 25 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
திமுக ஆட்சியில் தான், 3878 அரவாணிகள் கண்டெடுக்கப்பட்டு 2328 அரவாணிகளுக்கு அடையாள அட்டைகளும், 1238 பேருக்கு குடும்ப அட்டைகளும், 133 பேருக்கு தொகுப்பு வீடுகளும், 100 பேருக்கு தையல் இயந்திரங்களும், 482 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களும் 585 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளும் வழங்கப்பட்டன.
அரவாணிகளுக்காக 150 சுய உதவி குழுக்கள் அமைப்பதற்கு 6 லட்சத்து 9 ஆயிரம் ரூபாயும், சுயதொழில் தொடங்க 64 லட்சம் ரூபாயும் 2010-11-ல் இவர்களுக்கு நல உதவிகளை வழங்க 1 கோடி ரூபாயும் என அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன.
திருநங்கைகளுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள், அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்து தர கலைஞர் ஆணையிட்டார்.
திருநங்கைகளை 3வது பாலினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் உரிய இடம் மத்திய அரசு வழங்க வேண்டும்; இதற்காக திமுக பாடுபடும் என 2014 பாராளுமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவிலுள்ள திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அந்தஸ்து வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் லட்சுமி நாராயணன் என்பவர் தொடுத்த வழக்கு ஒன்று நடந்து வந்தது. இது சம்பந்தமான தீர்ப்பும் இப்போது வெளிவந்துள்ளது. நீதிபதிகள் கே.எஸ்.ராதா கிருஷ்ணன் மற்றும் ஏ.கே.சிகரி ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் “திருநங்கைகளை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக கருத வேண்டும். அவர்களுக்குத் தேவையான கல்வி வசதிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்க வழிவகுக்க வேண்டும். இவர்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க வேண்டும். இவர்களின் சமூக மேம்பாட்டிற்காக திட்டங்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக திருநங்கைகளுக்கு என பிரத்தியேக கழிவறைகளும், அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தித் தர வேண்டும். என மத்திய மாநில அரசுகளுக்கு தகுந்த உத்திரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி கழக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் தனி நபர் மசோதா கொண்டு வந்து சட்டமாக்கி சாதனை படைத்தார்.
எந்தெந்த பகுதி சமுதாயத்தில் பாதிக்கப்படுகிறதோ அவர்களுக்கெல்லாம் பாடுபடுவதுதான் திமுக கழகம், திமுகவின் தேர்தல் அறிக்கை இதற்கொரு அருமையான எடுத்துக்காட்டாகும்.