மக்கள் நலப் பணியாளர்கள்
கிராமப் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தோடு தொகுப்பூதியத்தில் 13500 மக்கள் நல பணியாளர்கள் 2.7.1990 முதல் கலைஞர் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 1991-ல் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் முதல்வராகிறார். கலைஞர் மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதா அவர்கள் அந்த 13500 மக்கள் நலப் பணியாளர்களையும் ஒரே உத்தரவில் டிஸ்மிஸ் செய்கிறார். இது முதல் நிகழ்வு.
மீண்டும் 1996-ம் ஆண்டு கலைஞர் பதவிக்கு வந்தவுடன் வீட்டுக்கு அனுப்பப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை பணிக்கு எடுத்துக் கொள்கிறார். அதன் பிறகு 2001-ம் ஆண்டில் முதலமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா அம்மையார் இரண்டாவது முறையும் அந்த மக்கள் நலப் பணியார்களை டிஸ்மிஸ் செய்கிறார். இது இரண்டாவது நிகழ்வு.
இதனால் மக்கள் நலப் பணியாளர்கள் பிச்சை எடுத்து பிழைக்கும். நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இவர்களில் கடுமையாக மனமொடிந்து விரக்தி நிலையில் இருந்த 90 பேர் தற்கொலை செய்து கொண்டு மாண்டனர்.
2006-ல் கலைஞர் திரும்பவும் முதல்வரானபோது மக்கள் நலப் பணியாளர்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையிலும். மனிதாபிமான அடிப்படையிலும் 3வது முறையாக அவர்களை பணிக்கு அமர்த்துகிறார். ஆனால் மக்கள் நலப் பணியார்களின் துரதிருஷ்டம் அவர்களைப் பின்தொடர்ந்து வருகிறது. ஜெயலலிதா அம்மையார் 2011-ல் மீண்டும் முதலமைச்சராகி ஈவு இரக்கமின்றி இந்த பணியாளர்களை 3வது முறையும் டிஸ்மிஸ் செய்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்தார். அரசியல் தலைவர்களுக்கு நீதிமன்றங்களும் கண்டித்தும் கூட அதிமுக அரசு இவர்களை இதுவரை பணியமர்த்தவில்லை.
2011 வரை தங்களது 20 வருட பணிக் காலத்தில் மூன்று முறை பணி நியமனமும் மூன்று முறை பணி நீக்கமும் சந்தித்த பெருமை இந்த மக்கள் நலப் பணியாளர்களுக்கு மட்டுமே உண்டு. தமிழகத்தை தவிர இந்தியாவிலும் அல்லது உலக நாடுகளில் எங்குமே இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்காது. எனவே இதனை ஒரு கின்னஸ் சாதனை என்றே சொல்லலாம்.
காங்கிரஸ்காரர்களாக; கமியூனிஸ்டுகளாக; அதிமுககாரர்களாக; திமுககாரர்களாக பார்க்கலாம் அனைவரையும் விவசாய பெருங்குடி மக்களாக பார்த்துதான் அவர்களது கூட்டுறவு கடன்கள் 7000 கோடி ரூபாயை கலைஞர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள். கலைஞரின் விஷயத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் ஏன் பின்பற்றவில்லை?