மீனவர்களுக்கான நலன்கள்
1974-ல் கலைஞருடைய ஆட்சி இருந்த நேரத்தில் முதன் முதலில் மீன் வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்பட்டது. எப்படி எல்லாத் துறைகளுக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் தனித்தனி அமைச்சகத்தைப் பெற்றுத் தந்தாரோ அதுபோல் மீனவர்களுக்கும் தனி அமைச்சகத்தை உருவாக்கித் தந்தார்கள். அதேபோல் மீனவர்களுக்கு தனி நல வாரியத்தையும் அமைத்துக் கொடுத்தார்கள்.
மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியுடன் கூடிய தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் சராசரியாக ஆண்டிற்கு 1,80,000 மீனவர்களுக்கு மே 2006 முதல் ஜனவரி 2011 வரை 88 கோடியே 51 லட்சத்துக்கு 29 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. 2009-10ம் ஆண்டிலிருந்து நிவாரணத் தொகை 1200 ரூபாயிலிருந்து 1800 ரூபாய்க உயர்த்தப்பட்டது. மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின்கீழ் சராசரியாக 1,20,000 மீனவ மகளிருக்கு மே 2006 முதல் ஜனவரி 2011 வரை 61 கோடியே 57 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
1.8.2006 முதல் மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படும். விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட அதிவேக எரியெண்ணையின் அளவு படகு ஒன்றுக்கு ஒரு மாதத்திற்கு 1000 லிட்டரிலிருந்து 1500 லிட்டராக உயர்த்தப்பட்டது.
20.9.2008 முதல் இலங்கை கடற்படையினரின் தாக்குதலின் போது உயிரிழக்க நேரிடும் மீனவர் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணத் தொகை ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாகவும், ஆதரவற்ற நிலையில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண தொகை 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.
மீனவர்களுக்கான இலவச வீடு கட்டித் தரும் திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் வீடுகள் கட்ட 7 கோடியே 80 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2010-11-ம் ஆண்டில் ம.சிங்காரவேலர் நினைவு வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தலா 75,000 வீதம், 2949 வீடுகள் கட்ட 22 கோடியே 12 லட்சம் ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டது.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மதிப்பிற்குரிய சிங்காரவேலர் மாளிகை என் பெயர் சூட்டி மகிழ்ந்தவர் கலைஞர். சிங்காரவேலரின் சிலையைத் திறந்து வைத்து அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியவரும் கலைஞர்தான்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் தேங்காய் பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் கட்டுவதற்கு 2008-ம் ஆண்டில் முறையே 27 கோடியே 10 லட்ச ரூபாய் மற்றும் 40 கோடி ரூபாய் அரசால் ஒப்பளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மீனவர் நல வாரியம் 2007-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 31.1.2011 வரை 3 லட்சத்து 85 ஆயிரத்து 755 மீனவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு 9 ஆயிரத்து 452 உறுப்பினர்களுக்கு 4 கோடியே 52 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும். என்று மீனவர் நலனுக்கென மத்திய அரசியல் தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். என்றும் 2014 பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டுள்ளது சிறப்பான அம்சமாகும்.
தேசிய மீனவர் நல்வாழ்வு ஆணையம் அமைக்க மாநிலங்களவையில் கழகக் குழுத்தலைவர் கனிமொழி கோரிக்கை!
“தமிழகம் உள்ளிட்ட இந்திய மீனவர்களுக்கான தேசிய மீனவர் நல்வாழ்வு ஆணையம்” உடனடியாக அமைக்கப்பட வேண்டும். என்று திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி எம்.பி.மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக மார்ச் 12-ம் தேதி மாநிலங்களவையில் கவிஞர் கனிமொழி பேசியதாவது:-
“இந்நாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், ஆபத்துகளையும் பற்றி இந்த அவையில் பலமுறை விவாதித்தாகி விட்டது. ஆனாலும் நம் நாட்டு மீனவர்கள் குறிப்பாக தமிழகத்து மீனவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு ஓர் நிரந்தரத் தீர்வு வரவேண்டும். என்று இன்னும் காத்திருக்கிறார்கள்.
மத்திய வேளாண்துறை அமைச்சகம் 2012-ல் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடித்துறை, அது தொடர்பான துறைகளை நம்பி வாழ்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி-டி.பி)யில் மீன்பிடித்துறை ஒரு சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பை செய்து வருகிறது. ஆனாலும் மீன்பிடித் துறையைச் சேர்ந்த கிராமப்புற பகுதி மக்களை அரசின் நலத்திட்டங்கள் சென்றடையாமல் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள். கடலில் மீன்பிடிப்பவர்களாகட்டும், உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடிப்பவர்களாகட்டும் இந்திய மீனவர் சமுதாயம் என்பது புறக்கணிக்கப்பட்ட மறக்கப்பட்ட சமுதாயமாக மாறிவருவதே உண்மை.
தேசிய கடல் மீன்பிடி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின் படி 61 சதவிகித மீனவக் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்றன. பொருளாதாரத்தில் மட்டுமல்ல… கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளிலும் மீனவர் சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.
மீனவ சமுதாயத்தை மேம்படுத்துவதற்காக அரசின் பல்வேறு துறைகள் தீட்டியிருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பெரும். சுணக்கம் நிலவுகிறது… உதாரணத்துக்கு… தேசிய மீனவர் நல்வாழ்வுத் திட்டத்தின் படி 2013-14-ம் ஆண்டில் மீனவர்களுக்காக வெறும் ஏழாயிரம் வீடுகள் மட்டுமே கட்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகள், மீனபிடி உபகரணங்களை பதிவு செய்தல் ஆகியவற்றுக்கான 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழக மீனவர்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
இத்தகைய நிலைகளை எல்லாம் கருத்தில் கொண்டு தேசிய மீனவர் நல்வாழ்வு ஆணையம் ஒன்றை உடனடியாக அமைக்குமாறு நான் மத்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இதுபோன்ற ஓர் ஆணையம் இப்போது அவசர, அவசியத் தேவையாக இருக்கிறது.
மேலும் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளான பருவநிலை மாற்றம், வெளிநாட்டுத் தாக்குதல்கள், உள்நாட்டு வாழ்வாதார பிரச்சனைகள் போன்றவற்றைக் கையாள தேசிய மீனவர் நல்வாழ்வு ஆணையம் மிகவும் அவசியம். மிகவும் பின்தங்கிய சமுதாயமாக இருக்கும் மீனவ மக்களுக்காக குரல் எழுப்பவும், அதன் மூலம் அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கும் இப்படி ஓர் ஆணையம் முக்கியத்தளமாக அமையும்.
எனவே நாடு முழுவதும் உள்ள மீனவர் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய மீனவர் நல்வாழ்வு ஆணையத்தை உடனடியாக அமைக்குமாறு மத்திய அரசை நான் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கனிமொழி எம்.பி.கோரிக்கை விடுத்திடுக்கிறார்.