நெசவாளர்களுக்கான நலன்கள்
தமிழகத்தைப் பொறுத்தவரை நெசவும் விவசாயமும் இரு கண்கள் போன்றவை.
தமிழகத்தில் கைத்தறி மூலம் துண்டு, வேட்டி, சேலை, படுக்கை விரிப்பு, லுங்கி, போர்வை, ஜமுக்காளம் போன்றவை மிக நேர்த்தியாகவும் அழகாகவும் நெசவு செய்யப்படுகிறது. பவானி ஜமுக்காளம் உலகப் பிரசித்தி பெற்றவை.
கைத்தறி தொழில் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, பவானி, பூந்துறை மற்றும் சேலம், ராசிபுரம், காஞ்சிபுரம், ஆரணி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பிரதான தொழிலாக உள்ளது.
கைத்தறி தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது கைத்தறிக்கு ஆண்டு முழுவதும் தள்ளுபடி மானியம், நெசவாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம், நெசவாளர் குடும்ப நலநிதி திட்டம், நெசவாளர் இலவச குடியிருப்புத் திட்டம், நெசவாளர்களுக்கு தனி வாரியம், தடையில்லாமல் கூட்டுறவு சங்கத் தேர்தல் மூலம் சிறந்த நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்கள்.
மேலும் நெசவாளர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த அவர்களுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் 1 லட்சம் கைத்தறி நெசவாளர்களும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கு பயன் பெற்றனர்.
மத்திய நெசவாளர்களுக்கு கலால் வரிசை ரத்து செய்வோம் என்று 2014 பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் கலைஞர் வாக்குறுதி வழங்கினார்.
காப்பீட்டுத் திட்டத்தில் நெசவாளர்கள் எவ்வளவு முறை வேண்டுமானாலும் மருத்துவ வசதிகளைப் பெறலாம். ஆனால் அதிமுக ஆட்சியில் மருத்துவ வசதிகளை 6முறை மட்டுமே பெறமுடியும். அதற்கு மேல் பயன்படுத்த விரும்பினால் தனது சொந்த பணத்தில் மட்டுமே சிகிச்சை பெற முடியும்.
அதிமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்து விட்டார்கள். எனவே நெசவாளர்கள் கஞ்சித்தொட்டி திறந்து தெருவில் அலையும் நிலை ஏற்பட்டது. முன்பு பேரறிஞர் அண்ணாவும் தலைவர் தலைஞரும் காஞ்சிபுரம் வீதிகளில் தங்களது தோள்களில் கைத்தறியால் நெய்த ஜவுளிகளைச் சுமந்து சென்று விற்பனை செய்து நெசவாளர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். என்பது குறிப்பிடத் தக்கது.
திமுக ஆட்சியில் தலைவர் கலைஞர் 3 கோடி ஏழை எளிய மக்களுக்கு வேட்டி வேலை இலவசமாக வழங்கினார்கள். இதன் மூலம் நமது கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 2011-ல் முதல்வராக பதவிக்கு வந்த ஜெயலலிதா அவர்கள் வேட்டி சேலை தயாரிக்கும் பணியை தமிழக நெசவாளர்களுக்கு தராமல் ஹரியானா மாநில நெசவாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். இதனால் தமிழக நெசவாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கைத்தறி துறை கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியம் ரூ.300 கோடியை வழங்கினால் நெசவாளர்களின் கஷ்டம் ஓரளவு குறையும். ஆனால் அதிமுக ஆட்சி 2011-16 முடிவுறும் தருவாயிலும் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய மானித் தொகை ரூ.300 கோடியை அதிமுக அரசு வழங்காததால் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் எந்த நேரத்திலும் இழுத்து மூடப்படும் நிலை எழுந்துள்ளது. இதனால் 5 லட்சம் கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் வேலை இழந்து வேறு வேலையை தேடி செல்லும் அவலநிலை ஏற்பட்டு நெசவுத் தொழில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.