இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் நல உதவிகள்
1973-ம் ஆண்டு திமுக ஆட்சியில் உருது பேசும் லெப்பைகளை தமிழ் முஸ்லீம்களைப் போல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அனைத்திந்திய அளவில் முஸ்லீம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க மிஸ்ரா ஆணையம் செய்துள்ள பரிந்துரையை நடைமுறைப்படுத்துவோம், என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தது. திமுக ஆட்சியில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் 8.7.2006 அன்று ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 99-ம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லீம்களுக்கு 31/2 சதவிகிதமும், கிறிஸ்தவர்களுக்கு 31/2 சதவிகிதமும் தமிழகத்திலுள்ள கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவைய்ப்புகளில் தனி உள் ஒதுக்கீடுகள் வழங்கி 12.9.2007 அன்று தலைவர் கலைஞர் ஆணையிட்டார்கள். இதன் பின்னர் தனி இட ஒதுக்கீடு தங்கள் சமுதாயத்திற்கு தேவையில்லை. என்று கிறிஸ்துவ தலைவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டது.
ரூ.1 கோடி நிதி ஒதுக்கி உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் 24.8.2009 அன்று கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 11 ஆயிரத்து 274 உறுப்பினர்களுக்க அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ரூ.12.93 லட்சம் செலவில் 704 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
உலமா ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.200 என்பது 2006 கழக ஆட்சியில் ரூ.400 எனவும், 1.12.2010-ல் ரூ.500 எனவும் உயர்த்தப்பட்டது. இந்த தொகையைத்தான் அதிமுக ஆட்சியில் ரூ.1000 ஆக உயர்த்தினார்கள். மேலும் 1998-99 கழக ஆட்சியில் ஓய்வூதியம் பெறும் உலமாக்கள் எண்ணிக்கை 2000 பேர் என்பது 2200 ஆகவும், 2007-2008-ல் 2400 ஆகவும் கழக ஆட்சியில் உயர்த்தப்பட்டது. அத்துடன் உலமா ஓய்வூதிய திட்டம் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் கழக ஆட்சியில் நீட்டிக்கப்பட்டது.
முஸ்லீம் மக்கள் தொகை அடிப்படையில் ஹஜ் பயணத்திற்கு ஒவ்வொரு நாட்டிற்கான ஒதுக்கீட்டை சவுதி அரசு நிர்ணயிக்கிறது. இதில் மத்திய அரசால் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒதுக்கீடு 13626. ஆனால் கழக ஆட்சியில் ஒதுக்கீட்டுக்கும் அதிகமாக விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 5611. கழக அரசு இந்திய பிரதமரிடம் கூடுதல் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கேட்டுப் பெற்று இஸ்லாமிய மக்களுக்கு துணை நின்றது குறிப்பிடத்தக்கது.
1974-ல் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி” என பெயர் சூட்டப்பட்டது.
திமுக ஆட்சியில் மிலாதுநபி பிறந்தநாளை அரசு விடுறை நாளாக அறிவித்ததை அதிமுக 2001-ல் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்பட்டு விட்டது. கலைஞர் மீண்டும் 2006-ல் ஆட்சிக்கு வந்ததும் 15.11.2006 நாளன்று வெளியிட்ட அரசாணை மூலம் அதை திரும்ப வழங்கினார்.
கலைஞர் ஆட்சியில் மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி கட்டிடங்களைப் பராமரிப்பதற்கென 5 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயும், வக்ஃபு வாரிய சொத்துக்களை பராமரிப்பதற்கென 40 லட்ச ரூபாயும் முதல் முறையாக மானியமாக வழங்கப்பட்டன.
பாரதப் பிரதமர் மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்தார். அதே போன்ற மதமாற்ற தடைச் சட்டத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மையார் தமிழகத்திலும் கொண்டு வந்தார். என்றைக்கும் நீதி வெல்லும் என்ற கருத்துடைய கலைஞர் அவர்கள் 2006-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அச்சட்டத்தை ரத்து செய்து முஸ்லீம்/கிறிஸ்துவர்/ சிறுபான்மையினர் நலம் காத்தார்.
கழக ஆட்சியில் தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்-2009 குறித்து இஸ்லாமிய அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று படிவத்தில் தக்க திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னையில் 2001-ல் காயிதேமில்லத் மணிமண்டபம் அமைத்திட கழக ஆட்சியில் 58 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உருது அகாடமி ஒன்று அமைக்க வேண்டும் என்றும், உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். என்றும் சட்டமன்ற உறுப்பினரும் கலைஞரின் அன்பு நண்பருமான அப்துல் லத்தீப் அவர்கள் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கூறி அவரது கோரிக்கையை அமைச்சர் க.இராஜாராம் அவர்கள் ஏற்க மறுத்தார். சட்டத்தில் இடமில்லை. என்றாலும் தன் இதயத்தில் இடமுண்டு என்று கூறி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அந்த கோரிக்கைகளை சட்டமாக்கினார்.
தியாகராய நகரில் பள்ளிவாசலில் திடீர் பிள்ளையார் ஒன்றைத் தோன்றச் செய்த சில தீய சக்திகளின் சூழ்ச்சியறிந்து கலைஞர் அதனை அகற்றச் செய்து சிறுபான்மையினர் நலம் காத்தார்.
மகாத்மா காந்தியின் மரணத்தின் போது அவரைக் கொன்றவர் ஒரு முஸ்லீம்தான் என்ற தவறான செய்திகளைப் பரப்பிய நேரத்தில் பெரியார் அமைதி ஏற்படுத்தினார். பேரறிஞர் அண்ணா அவர்கள் வானொலி மூலம் உரையாற்றி சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக நின்றார்கள். தியாகராய நகரில் பள்ளிவாசலில் திடீர் பிள்ளையார் ஒன்றைத் தோன்றச் செய்த சில தீய சக்திகளின் சூழ்ச்சியறிந்து கலைஞர் அதனை அகற்றச் செய்து சிறுபான்மையினர் நலம் காத்தார்
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தும் சிறப்பு அதிகாரியாக அலாவுதீன் இ.ஆ.பெ. அவர்களை நியமித்தார். கலைஞர்.
சென்னை மேடவாக்கம் பகுதியில் பல ஏக்கர் நிலத்தை காயிதே மில்லத் கல்லூரிக்கு அரசு சார்பில் வழங்கியவர் கலைஞர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையத்தை நிறுவியவர் கலைஞர்.
சீறாப்புராணம் படைத்த அமுதகவி உமறுபுலவருக்கு 2008-ல் மணி மண்டபம் எழுப்பியவர் கலைஞர்.
“சிறுபாண்மையினருக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் அது என் பிணத்தை தாண்டித்தான் நிகழும்” என கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் பிறந்தநாளின்போது அவரது கல்லறையில் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செய்தவர் கலைஞர்.
1972-ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் அனுமதிக்கப்பட்டு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. செய்தியறிந்ததும் தலைவர் கலைஞர் அவர்கள் தனது கோவை மாவட்ட சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஓடோடி சென்று கண்மூடி மயக்க நிலையில் படுத்திருந்த காயிதே மில்லத் அருகில் குனிந்து மெல்லிய குரலில் “அய்யா, நான் கருணாநிதி வந்திருக்கிறேன்” என்று கூறுகிறார் “அவர்கள் கண் விழித்துப் பார்த்தார்கள். வந்திருப்பது யார் என்பதையும் புரிந்துக் கொண்டார்கள். கலைஞரைப் பார்த்து தங்களது கரங்களை நீட்டினார்கள். அவர் கரங்களை கலைஞரும் பிடித்துக் கொண்டார். அதேசமயம் காயிதே மில்லத் அவர்கள் மேலும் பலகீனமாக குரலில், “முஸ்லீம் சமுதாயத்திற்குத் தாங்கள் செய்த உதவிகளுக் கெல்லாம். எனது நன்றி” என்று கூறினார்கள். அதுகேட்டு கலைஞர் அப்படியே மெய்மறந்து கண்கலங்கி விட்டார். என்ன செய்வதென்றே தெரியாது. கலைஞர் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். அதற்குள்ளாக காயிதே மில்லத் அவர்களின் கண்கள் மூடிக் கொண்டன. மீண்டும் மயக்க நிலை ஏற்பட்டு விட்டது. அதற்குப் பிறகு காயிதே மில்லத் அவர்கள் மீண்டும் சுயநினைவு பெறவேயில்லை” என்று இந்நிகழ்வு குறித்து தென்காசி என்.கே.ரிபாயி அவர்கள் தான் எழுதிய கவ்மீன் காவலர் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.