மாநில சுயாட்சி
1969 ஆகஸ்ட் 19-ம் நாள் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் கலைஞர் மாநிலங்கள் சுயாட்சி பெறுவதற்குத் தேவையான திருத்தங்களை அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வருவது பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக குழு ஒன்று நியமிக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி செப்டம்பர் 22-ம் நாள் தமிழக அரசு டாக்டர் பி.வி. இராசமன்னாரைத் தலைவராகவும் டாக்டர் ஆ.இலட்சுமணசாமி முதலியார், பி.சந்திரா ரெட்டி ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.
அந்த குழு தங்களுடைய ஆய்வறிக்கையை 1971 மார்ச்
10-ம் நாள் தமிழக அரசிடம் அளித்தது.அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீர்மானத்தை 1974 ஏப்ரல் 16-ம் நாள் கலைஞர் சட்டப் பேரவையில் முன்மொழிந்தார். 161 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று இந்த மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேறியது.