ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் எரிவாயு அடுப்பும் இணைப்பும்
பகுதி நேர நடமாடும் கடைகள் உள்பட 33,236 நியாய விலைக்கு கடைகள் மூலம் 2 கோடி குடும்ப அட்டைகளுக்கு இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்திற்கு 2006-ல் முதலமைச்சராக பதவியேற்ற அதே விழா மேடையிலேயே தலைவர் கலைஞர் முதல் கையெழுத்திட்டார். பின்னர் கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்பது ஒரு ரூபாயாக குறைத்தும் ஆணையிட்டார்.
661 கோடி ரூபாய் செலவில் 29 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சமுதாயத்தில் ஏழை எளிய பிரிவினருக்கு இலவச எரிவாயு அடுப்பு இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை தலைவர் கலைஞர் 14.1.2007 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
3742 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 15.9.2006 அன்று அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் எனும் ஊரில் உள்ள சமத்துவபுரத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தை கலைஞர் தொடங்கி வைத்தார்.