ஏழை எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
குடியிருப்போர் மனையை குடியிருப்போருக்கே சொந்தமாக்கி சட்டம் செய்தவர் கலைஞர்.தமிழகம் முழுவதும் இப்படி திமுக ஆட்சியில் 8 லட்சத்து 30 ஆயிரத்து 495 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.
கலைஞர் வீடு வழக்கும் திட்டம்
21 லட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றக்கூடிய கலைஞர் வீடு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ரூ.75 ஆயிரம் மானியம் வீதம் 2250 கோடி ரூபாய் செலவில் 3 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கு 15.8.2010 முதல் பயனாளிக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின்கீழ் முதல் வீடு கடலூர் மாவட்டம் சிதம்பரம். அருகே வல்லம்படுகை கிராமத்தில் 9.10.2010 அன்று பயனாளிக்கு வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 77 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 60 ஆயிரத்து 486 வீடுகளில், பயனாளிகள் குடிபுகுந்தார்கள்.
இத்திட்டத்தின்கீழ் இரண்டாம் கட்டமாக 2,98,162 வீடுகள் கட்டுவதற்கு பணி ஆணைகளும் வழங்கப்பட்டன. மேலும் 12 லட்சம் பயனாளிகளுக்கு தகுதி அட்டைகளும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்பகுதிகளில் நடுத்தர மக்களுக்கு சொந்த வீடுகள்
1972க்கு முன்பு நடுத்தர மக்கள் சொந்த வீட்டில் குடியிருப்பது என்பது பெரும் கனவாகவே இருந்தது.
நடுத்தர மக்களின் அந்த கனவை நிறைவேற்றிட தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் சென்னை மதுரை திருச்சி ஆகிய பெருநகரங்களுக்கு அருகில் அண்ணாநகர், கலைஞர் கருணாநிதி நகர், காமராஜர் நகர் முதலி புதிய புதிய குடியிருப்பு நகரப் பகுதிகள் உருவாக்கப்பட்டன.
குடிசை மாற்றுவாரியம்
சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் சேரிகள் நிறைந்திருந்தன. துப்புரவு வசதிகள் இன்றி நோய்கள் தாக்கப்பட்டு சேரி மக்கள் துன்புற்றனர்.
எனினும் சேரி மக்கள் எவரும் “எங்களுக்கு மாடி வீடு கட்டித் தர வேண்டும்” என கோரிக்கை வைத்திடவில்லை. ஆனால் அவர்கள் கேளாமலேயே குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முதலாக திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.