மாநில திட்டக்குழு
இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதார முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டக்குழு ஒன்று இருந்தது. அதைப் போன்று மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக மாநில அளவிலும் திட்டக்குழு ஒன்று அமைக்க வேண்டும் என்று கருதப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் கலைஞர் 1971 ஏப்ரலில் மாநில திட்டக்குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன் முதலில் மாநிலத்திற்கென்று திட்டக்குழு அமைக்கப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது.