அருந்ததியினருக்கு சதவிகித உள் இடஒதுக்கீடு
அருந்ததியினர் மக்கள் தனி இட ஒதுக்கீட்டுக்காக பல போராட்டங்கள், உண்ணாவிரதம், பேரணிகள் நடத்தி முதல்வராக இருந்த கலைஞரிடமும் துணை முதல்வராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலினிடமும் கோரிக்கைகள் வைத்தனர்.
இந்த அருந்ததி சமுதாய மக்கள் எப்படி வாழ்கிறார்கள்- என்ன தொழில் செய்கிறார்கள்? இவர்கள் வாழ்வாதாரம் என்ன? இவர்கள் மக்கள்தொகை எவ்வளவு? என்பதையெல்லாம் ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஜெனார்த்தனம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து கலைஞர் ஆணையிட்டார்கள்.
மேற்கண்ட குழுவின் சிபாரிசினை ஏற்று இடையில் இதற்காக எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும், அனைத்து சமுதாய மக்கள் போல கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், அரசியலிலும், வாழ்வாதாரத்திலும் அருந்ததியினர் முன்னேற வேண்டும் என்று விரும்பிய தலைவர் கலைஞர் அவர்கள் அருந்ததியினர் மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் சதவிகித ஒதுக்கீடு வழங்கி 27.2.2009 அன்று ஆணையிட்டார்கள்.
இந்த ஒதுக்கீட்டின் பலனாக அருந்ததியினர் இப்பொழுது டாக்டர்களாகவும் பொறியாளர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் வருடத்திற்கு மொத்தம் 2150 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் கல்லூரி கட்டணமாக 64 லட்ச ரூபாயினை அரசே செலுத்தி படிக்க வைத்த பெருமை கலைஞரையே சாரும். செருப்பு தைக்கும் அருந்ததியர் மகள் டாக்டரானதும் துப்புரவு செய்யும் தொழிலாளி மகன் பொறியாளர் ஆனதும் கலைஞர் ஆட்சியில்தான் சாத்தியமாயிற்று.
பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதமாகவும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதமாகவும் இட ஒதுக்கீடு பகிர்ந்தளித்து கலைஞர் சாதனை
இட ஒதுக்கீடு 25லிருந்து 31 சதவிகிதமாக உயர்வு 1970-ம் ஆண்டில் கழக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக இந்தியாவிலேயே முதன் முறையாக திரு.ஏ.என். சட்டநாதன் தலைமையில் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிசனின் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 25 சதவிகிதம் என்றிருந்த இடஒதுக்கீட்டினை 31 சதவிகிதமாக உயர்த்தி கலைஞர் ஆணையிட்டார்.
திமுகவின் கடுமையான எதிர்ப்பினால்தான் இடஒதுக்கீடும் தப்பியது; அது 50 சதவிகிதமாகவும் உயர்ந்தது.
1979-ல் அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்படுத்தப்பட்டோரில் 9 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும். என்று ஒருபுதிய சட்டத்தை இயற்றினார். திமுக அந்த அரசாணையை ஏற்கவில்லை; கடுமையாக எதிர்த்தது.
இந்நிலையில் அப்போது 1980-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எம்.ஜி-ஆர். அவர்கள் படுதோல்வி அடைந்தார். 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. வேறுவழியின்றி பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான வருமான உச்சவரம்பு சட்டத்தை எம்.ஜி-ஆர். அவர்கள் திரும்பப் பெற்றதோடு அவர்களுக்கான இடஒதுக்கீட்டினை 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தியும் உத்திரவு பிறப்பித்தார். என்பது வரலாறு. திமுகவின் கடுமையான எதிர்பினால்தான் இடஒதுக்கீடும் தப்பியது; அது 50 சதவிகிதமாகவும் உயர்ந்த்து
பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதமாகவும் உள் ஒதுக்கீடு வழங்கி கலைஞர் ஆணை.
பிற்படுத்தப்பட்டோருக்கென்று மொத்தமாக அனுமதிக்கப்பட்டிருந்த 50 சதவிகித இடஒதுக்கீடு என்பது இனி பிற்படுத்தப்டோருக்கு 30 சதவிகிதமாகவும் மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு 20 சதவிகிதமாகவும் புதுவடிவம் பெற்றது.
தமிழக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், பா.ம.க.உறுப்பினர் கோ.சு.மணி, தமிழக ஆயர் பேரவையின் தலைவர் ஏ.எம்.சின்னப்பா ஆகியோரது கோரிக்கையினை ஏற்று கிறிஸ்தவ வன்னியர்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து கலைஞர் உத்திரவு பிறப்பித்தார்கள்.
கொங்கு வேளாளர் இனம் முற்பட்ட வகுப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோவை செழியன் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று 1975-ல் முதல்வர் கலைஞர் அவர்கள் அதற்கான உத்திரவை பிறப்பித்தார். அதனால் அந்த இனம் இன்றைக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் கூடுதல் பலன் பெற்று வருகிறது.