கிறிஸ்துவர்களுக்கு நல உதவிகள்
தமிழுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் அரும்பெரும் தொண்டாற்றியவர் “இராபர்ட் கால்டுவெல்” ஆவார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த அப்பெரியவர் வாழ்ந்த இடையன்குடி இல்லம் கழக ஆட்சியில் மணிமண்டபமாக மாற்றி அமைக்கப்பட்டது.
கிறிஸ்துவ அறிஞரும் இயேசு சபைத் துறவியுமான வீரமாமுனிவரின் சிலை இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது சென்னை மெரீனா கடற்கறையில் பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது நிறுவப்பட்டது. வீரமாமுனிவரின் பிறந்தநாளில் அரசே விழா எடுத்து அவரது சிலைக்கு 8.11.2009 முதல் மரியாதை செலுத்தி வீரமா முனிவருக்கு பெருமையும் புகழும் சேர்த்தவர் கலைஞர் அவர்கள்.
கிறிஸ்துவ மதபோதகரும் “இயேசு அழைக்கிறார்” நிறுவன தலைவருமான சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் உடல்நலம் குன்றி மரண படுக்கையில் இருந்த நேரத்தில் கலைஞர் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவரது மறைவிற்குப் பிறகு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தார். அத்துடன் அவர் வாழ்ந்த அப்பகுதியில் உள்ள சாலைக்கு “டி.ஜி.எஸ்.தினகரன் சாலை” என பெயரிட்டு கலைஞர் மரியாதை செலுத்தினார்கள்.
ஒரிசாவில் ஆஸ்திரேலியா நாடடைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் கிரஹாம் டெயின்ஸ் அவரது குடும்பத்தினருடன் காரில் பூட்டி உயிருடன் தீ வைத்து எரிந்து கொல்லப்பட்டனர். இச்செய்தியறிந்த கலைஞர் இந்தியாவில் எந்த முதல்வரும் கண்டனக் குரல் எழுப்பாத நிலையில் இந்து வெறியர்களைக் கண்டித்து முதன் முதலாக எழுப்பாத நிலையில் இந்து வெறியர்களைக் கண்டித்து முதன் முதலாக குரல் கொடுத்தார்கள். அத்துடன் ஒரிசாவில் கிறிஸ்துவமத அருட்சகோதரிகளை பாலியல் பலாத்காரம் தெய்த மத வெறியவர்களின் மனிதாபிமானமற்ற செயலையும் கலைஞர் கடுமையாக கண்டித்தார்.
நாமக்கல், விழுப்புரம், சென்னை, பல்லாவரம், வேளச்சேரி, தண்டையார் பேட்டை பகுதிகளில் கிறிஸ்தவர்களின் கோரிக்கையை ஏற்று பலகோடி மதிப்புள்ள நிலத்தை கல்லறைக்கு ஒதுக்கி கலைஞர் உதவினார். மேலும் சென்னை புறநகர் காரப்பாக்கம் பகுதியில் பலகோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.
2000-ம் ஆண்டில் கிறிஸ்துவர்களின் வேண்டுகோளை ஏற்று இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான தூய தோமையார் வாழ்ந்து வந்த “பரங்கிலை” என்று அழைக்கப்பட்ட அப்பகுதியை “புனித தோமையார் மலை” என மாற்றின்னர்; மேலும் 2011-ல் அப்பகுதியைத் தேசிய திருத்தலமாகவும். சுற்றுலா தலமாகவும் ஆக்கி ஆணையிட்டார். அத்துடன் அரசு சார்பில் 50 லட்ச ரூபாய் நிதியையும் அளித்து தலையாயப் பேராயர்கள் கலந்து கொண்ட அவ்விழாவில் துணை முதல்வராக இருந்த தளபதி ஸ்டாலின் அவர்களை பங்கேற்க செய்து கிறிஸ்தவ மக்களை மகிழச் செய்தார்.