சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இவற்றில் 65000 சத்துணவு மையங்களும், 54439 அங்கன்வாடி மையங்களும் உள்ளன. இவற்றில் 2லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 1989 கழக அரசியல் இவர்களை அந்தந்த ஊராட்சியின் நிரந்தர பகுதி நேர பணியாளர்கள் என வகைப்படுத்தப்பட்டனர்.
கழக ஆட்சியில் 2007 முதல் பணிக்காலத்தில், காலமான சத்துணவு/அங்கன்வாடி ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
கழக ஆட்சியில் சத்துணவு பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டது.
1996-2001 கழக ஆட்சியில் சத்துணவு பணியாளர்கள் குடும்பநல நிதித் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, பணிக்காலத்தில் காலமான சத்துணவு பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவது போன்று 1,50,000 குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.
சத்துணவு சயைலர்/உதவியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 55லிருந்து 58 ஆக உயர்த்தி தரப்பட்டது.
சத்துணவு/அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு சேமநல நிதித் திட்டம் தொடங்கப்பட்டு அரசின் பங்குத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
200-5-250.10.400 என அவர்கள் பெற்று வந்த ஊதியம் ரூ.600-10-700-20-1100 என உயர்த்தி 1.1.1996 முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட்டது. அவர்களது ஊதியம் இரண்டாவது முறையாக 1.9.2006 முதல் 1300-20-1500-25-2000 ஆகவும் மூன்றாம் முறையாக ஊதியக் குழு பரிந்துரைப்படி ரூ.2500-500 அத்துடன் தர ஊதியம் ரூ.500 என 1.9.2006 முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட்டது.
கழக ஆட்சியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களில் பத்தாண்டு காலம் பணி முடித்தவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வும், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு மற்றொரு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த சத்துணவு உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கன் அனைவருமே கழக ஆட்சியிலிருந்துதான் சிறப்பூதியம் பெற்று வருகின்றனர்.
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் அகவிலைப்படி தவிர ஏனைய படிகள் எதுவும் வழங்கப்படவில்லை. கழக ஆட்சியிலேதான் அவர்களுக்கு முதன்முறையாக 1.6.2009 முதல் மாதந்தோறும் வீட்டு வாகைப்படி, நகர ஈட்டுப்படி ஆகியவைகளுக்கும் 100 ரூபாய் மருத்துவப்படியும், 2000 ரூபாய் பண்டிகை முன்பணமும் வழங்கப்பட்டது.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் மாதாந்திர ஓய்வூதியம் எதுவும் கிடையாது. ஆனால் கழக ஆட்சியிலே தான் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களில் சமையலருக்கும், முதல்நிலை அங்கன்வாடி ஊழியர்களுக்கும், சமையல் உதவியாளர்களுக்கும், இரண்டாம் நிலை அங்கன்வாடி ஊழியர்களுக்கும் முறையே மாதந்தோறும் ரூ.700, ரூ.600, ரூ.500 என்று முதல் முறையாக ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
அதிமுக ஆட்சியில் அவர்களுக்கு எந்த பதவி உயர்வும் வழங்கப்பட்டதில்லை. கழக ஆட்சியிலேதான் சத்துணவு உதவியாளர்களுக்கு சமையலர்களாகவும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு சத்துணவு அமைப்பாளராகவும் என மொத்தம் 1020 பேர்களுக்கு பதவி உதயர்வு வழங்கப்பட்டன.
கழக ஆட்சியிலேதான் 1.4.2010 முதல் இவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
சிறப்பு சேமநல நிதித்திட்டம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டடத்தின் கீழ் இரண்டு லட்ச ரூபாய் வரை மருத்துவ வசதி தொடங்கப்பட்டது.
ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் பி.எட் முடித்த சத்துணவு மற்றும் குழந்தைமைய பணியாளர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கழக அரசு ஆணை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தும் பொருட்டு தகுதிவாய்ந்த 59 அங்கன்வாடி பணியாளர்களுக்கும், 405 சத்துணவு பணியாளர்களுக்கும் பெயர் பட்டியல் 4.10.2010 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்பட்டு நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சத்துணவு அமைப்பாளர்களும் அங்கன்வாடி பணியார்களும், அதிமுக ஆட்சியில் குறைந்தபட்ச ஊதியமாக மாதந்தோறும் 1488 ரூபாயும் உயர்ந்தபட்ச ஊதியமாக 2158 ரூபாயும் பெற்று வந்தனர். ஆனால் கழக ஆட்சியிலே அவர்கள் குறைந்தபட்ச ஊதியமாக மாதந்தோறும் 4911 ரூபாயும் அதிகபட்ச ஊதியமாக மாதந்தோறும் 5471 ரூபாயும் பெற்றனர்.
சத்துணவு அமைப்பாளர்கள் அங்கன் வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு தமிழகத்தில் வழங்கப்படும் சலுகைகளும் திட்டங்களும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. என்பது குறிப்பிடத்தக்கது.