தொழில்வளமும் வேலைவாய்ப்பும்
திமுக ஆட்சியில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள முன்னணி தொழில் அதிபர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும் அவர்களிடமிருந்து தொழில் வளர்ச்சிக்கான முதலீடுகளைப் பெறவும் சிப்காட் என்ற அரசு நிறுவனம் தொடங்கப்பட்டது. 5.10.1998 அன்று தமிழக அரசியல் தொழில்நுட்பத்திற்கான தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டது.
தொழில் வளம் பெருக சாலை வசதி, குடிதண்ணீர் வசதி, மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். இது பற்றிய விவரங்கள் ஏற்கனவே அதற்கான தலைப்புகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சியில் தொழில் தொடங்க பல்வேறு இடங்களில் அமையப் பெற்ற அரசுதுறைகளின் அனுமதிகளை பெறுவதற்காக தொழில் அதிபர்கள் அலைக்கழிககப்பட்டு வந்தனர். திமுக ஆட்சியில் இந்த முறையை மாற்றியமைத்து அனைத்து துறைகளின் அனுமதிகளை ஓரே இடத்தில் பெறுவதற்காக சிங்கிள் விண்டோ சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தொழிலதிபர்கள் எந்த சிரமமுமின்றி லைசென்சு பெற்று தொழில் தொடங்கி பயனடைந்தனர்.
பழைய மாமல்லபுரம் சாலை உலகத் தரத்திற்கு இணையாக விரிவுபடுத்தப்பட்டு அதற்கு ராஜீவ்காந்தி சாலை என பெயரிடப்பட்டது. 5.7.2000 அன்று சென்னை தரமணியில் ரூ.338 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா நிறுவப்பட்டது. சென்னை சோழிங்கநல்லூரில் 377.08 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டது.
571 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட் தொழிற்பேட்டை, 347 ஏக்கர் பரப்பளவில் ஒரகடத்தில் ஹைடெக் தொழிற்பேட்டை, 40 ஏக்கரில் மறைமலை நகரில் சிப்காட் தொழிற்பேட்டை, 154 ஏக்கரில் இருங்காட்டுட்க கோட்டையில் சிட்கோ தொழிற்பேட்டை, 2020 ஏக்கரில் திருமுடிவாக்கத்தில் சிட்கோ தொழிற்பேட்டை, 30 ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரத்தில் தொழிற்பேட்டை மற்றும் தமிழகம் முழுவதும் சிப்காட் தொழிற்பேட்டை, கூடுதலாக திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டன.
மேற்குறிப்பிட்ட உள்கட்டமைப்பு வசதிகளாலும் திமுக அரசின் சிறப்பான அணுகுமுறைகளாலும் உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமுடன் முன்வந்தனர். 2006-11 திமுக ஆட்சியில் அந்த நிறுவனங்களுடன் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதற்கான 27 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு ரூ.62,340 கோடி முதலீட்டில் சென்னையைச் சுற்றிலும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சோழிங்கநல்லூர் முதலிய இடங்களில் 51 புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் 2,35,664 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்ப துறையிலும் கணினி துறையிலும் தமிழகத்தை முன்னேற்றி பெருமளவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
ரூ.4500 கோடி செலவில் ராணுவ ஆராய்ச்சி மையம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச் செல்வம் முயற்சியால் தர்மபுரிக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ரூ.1553 கோடி மதிப்பில் சேலம் உட்டாலை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டு புதிய குளிர் உருட்டாலை உருவாக்கப்பட்டது. ரூ.470 கோடி மதிப்பில் சென்னைக்கு அருகே ஒரகடத்தில் மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட வளர்ச்சி கட்டமைப்பு மையம் நிறுவப்பட்டது.
மேலும் 1969-ம் ஆண்டு கலைஞர் அவர்கள் தொழில்துறை அமைச்சரையும் அரசு உயர் அதிகாரிகளையும் குஜராத்துக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் குஜராத் தொழில் வளர்ச்சி திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார்கள்.
1969 முதல் 1975 வரை கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரோடு கூட்டணி வைத்திருந்த காரணத்தால் சேலத்தில் இரும்பாலை, தூத்துக்குடியில் பல்லாவரத்தில் தாதா பார்ம் ஆப்டிகல்ஸ் தொழிற்சாலை, ஓசூருக்குப் பக்கத்தில் ஏசியன் பேரிங்ஸ் லிமிடெட் ஆகியவைகள் கொண்டு வரப்பட்டன.
1989-90ல் திமுக ஆட்சியில் 22 கோடி ரூபாய் முதலீட்டில் ஏஷியன் பெயிண்ட் தொழிற்சாலை, 81 கோடி ரூபாய் முதலீட்டில் மணலியில், யு.பி.பெட்ரோ பிராடக்ட்ஸ் தொழிற்சாலை, 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூரில் டைட்டன் கடிகாரம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்பட ஏராளமான தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன.
சத்துணவில் குழந்தைகளுக்கு தினம் ஒரு முட்டை வழங்கி கோழிப் பண்ணைத் தொழில் மேம்படுத்தப்பட்டது. கோழி தீவனத்திற்காக மத்திய உணவு கழகத்தில் மானிய விலையில் அரிசி கோதுமை பெற்று கோழிப் பண்ணையாளர்களுக்கு வழங்கி கோழிப்பண்ணைத் தொழில் ஊக்குவிக்கப்பட்டது.
2006-11ல் திமுக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் எதிர்கால மின் தேவைக்காக 15, 710 கோடி முதலீட்டில் 7,798 மெகாவாட் மின் உற்பத்திக்காக 8க்கும் மேற்பட்ட அனல் மின் உற்பத்தி திட்டங்களைத் தொடங்கினார். அதற்காக அந்த 5 ஆண்டுகளில் செலவிடப்பட்ட தொகை 11, 084 கோடி ரூபாய். இப்படி 2011லிருந்து 2016 வரைக்கான கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட மேற்குறித்த மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் தான் தற்போது 4300 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்சாரம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் அதிமுக 2011-2016 ஆட்சியில் புதியதாக ஒரே ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும். 2006-11ல் கலைஞர் தொடங்கிய மேற்குறிப்பிட்ட அனல் மின்நிலையங்கள் இன்றைக்கு இல்லை. என்றால் தமிழகம் இன்னேரம் இருளில் மூழ்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சாலை வசதி, குடிநீர் வசதி, தொழிற்சாலை அமைத்தல், உற்பத்தி அதிகரிப்பு, விவசாயம், நல்ல நிர்வாகம், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் திமுக ஆட்சி காலங்களில் சிறப்பாக இருந்தன..
திமுக ஆட்சியில் தொழில்வளம் இந்தியாவிலேயே முதலிடம் தொழில் முதலீட்டாளர்களிடம் கடைப்பிடித்த எளிமையான அணுகு முறைகளாலும் விடா முயற்சி அயராத உழைப்புகளாலும் பல்லாண்டு கால அரசியல் அனுபவம் மற்றும் ராஜதந்திரம் இவைகளின் துணை கொண்டு தமிழக அரசை வெகு காலமாக மிரட்டிக் கொண்டிருக்கும் மின்வெட்டினை லாவகமாக சமாளித்து 2006-11 திமுக ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முதல் இடத்தையும் முதலீடு மற்றும் உற்பத்தி வளர்ச்சியில் மூன்றாவது இடத்தையும் பெற்றுத் தந்து சரித்திர சாதனை நிகழ்த்தியவர் தலைவர் கலைஞர். கீழ்க்கண்ட பத்திரிகைச் செய்திகளே அதற்கான சான்றுகளாகும்.
“2008-2009-ம் ஆண்டின் தொழிற்சாலைகள் குறித்த ஆய்வில், தமிழ்நாட்டில் மொத்தம் 26122 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் 17.74.019 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. மொத்தம் மதிப்பீட்டில் தமிழகம் மூன்றாம் இடத்தை வகிக்கிறது” மத்திய அரசின் மத்திய புள்ளியியல் துறை (Central Statistical Organisation) பாராட்டியது.
“தமிழக வாகன உற்பத்தி தொழிற்சாலைக்குத் தேவையான நிலங்கள், சாலைகள் மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதில் தமிழகம் தான் பிற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்படுகிறது. எனவும், முதலீடுகளை ஈர்ப்பதில் 12க்கும் மேற்பட்ட அரசுடைமை சார்ந்த அனுமதிகளை ஒன்றைச் சாளர முறையில் ஒரே இடத்தில் வழங்கியுள்ளது” என்று 8.7.2010 நாளிட்ட Wall Street Journal என்ற பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
“India Deconstructed என்ற ஒரு ஆய்வை நடத்தி அன்னிய முதலீடுகளை, ஈர்ப்பதில் அமைந்துள்ள தேவையான உள்கட்டமைப்பும், தமிழக அரசின் ஆளுமையுமே” என்று Oxford Analytica பன்னாட்டு நிறுவனம் புகழ்ந்தது.
“முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே மிகச் சிறந்து விளங்குகிற மூன்று மாநிலங்களில் தமிழகமும் ஒன்று, வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் தான் சிறந்தது. இவற்றில் சிறந்து விளங்கும் உலகின் 10 மையங்களில் தமிழகமும் ஒன்று” என Assocham என்ற தொழில் கூட்டமைப்பு நிறுவனம் வெளியிட்ட Bizcon என்ற அறிக்கையில் தமிழகத்தை வெகுவாய் பாராட்டியது.
“இந்தியாவிலேயே தொழிற்சாலைகள்/ஏற்றுமதிக்கு தமிழகத்தின் பங்கு மிகப் பெரியது” என Economic Times என்ற நாளிதழில் கலைஞர் அரசுக்கு பெருமைச் சேர்த்தது.
“2009-2010ம் ஆண்டு வரையிலான 11 மாதங்களில் தொழில் வளர்ச்சி 11.5 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக” All India Indore of Industrial Production ன் புள்ளி விவரம் தெரிவிக்கிறத-
“2006-2010 திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் 4.06 மடங்கு அதிகரித்துள்ளது. என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் Centre for Monitoring India Economy Pvt Ltd அறிவித்தது. திமுக அரசுக்குக் கிடைக்கப் பெற்ற சிறப்பான பாராட்டுகள் ஆகும்.
1967 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார். அவருக்குப் பிறகு 1969 முதல் 2016 இன்று வரை திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் இந்தியாவிலேயே முதல் இடத்திலேயே இருந்து வந்தது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அது சரிந்து இன்று கடைசி நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
அதுபற்றிய அதிகாரப்பூர்வ அட்டவணை கீழ்வருமாறு
வருடம் திமுக அதிமுக
1967-1976 3வது இடம் –
1977-1988 – 10வது இடம்
1989-1991 முதல் இடம் –
1991-1996 – 6வது இடம்
1996-2001 முதல் இடம் –
2001-2006 – 5வது இடம்
2006-2011 முதல் இடம் –
2011 – முதல் கடைசி இடம்