1969 – 1976 ஆட்சிக் காலம்
- பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்.
- இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.
- குடிசை மாற்று வாரியம்.
- சுற்றுலா வாரியம்.
- குடிநீர் வடிகால் வாரியம்.
- ஆதிதிராவிடர் இலவசக் கான்க்ரீட் வீட்டு வசதித் திட்டம்.
- சிங்காரவேலர் நினைவு மீனவர் இலவச வீட்டு வசதித் திட்டம்.
- பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கெனத் தனி அமைச்சகம்.
- பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் இட ஒதுக்கீடுகளை உயர்த்தியது.
- பேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்துக் கழங்கங்கள் உருவாக்கம்.
- அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புத் திட்டம்.
- விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு மனை உரிமைச் சட்டம்.
- சேலம் உருக்காலைத் திட்டம்.
- 15 ஏக்கர் நில உச்சவரம்புச் சட்டம்.
- 1,78,880 ஏக்கர் உபரி நிலம் மீட்கப்பட்டு 1,37,236 வியசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
- சிப்காட் தொழில் வளாகங்கள்.
- பூம்புகார் கப்பற் போக்குவரத்துக் கழகம்.
- ஆதரவற்ற குழந்தைகளுக்கு திருக்கோயில்களில் கருணை இல்லங்கள்.
- கை ரிக்ஷாக்களை ஒழித்துச் சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம்.
- மாற்றுத் திறனாளிகள் நல வாழ்வுத் திட்டம்.
- அஞ்சுகம் அம்மையார் நினைவுக் கலப்புத் திருமனத் திட்டம், 1969 – 1976-ல் தங்கப் பதக்கம், 1989 – 1990-ல் ரூ.5,000 நிதியுதவி, 1996-ல் ரூ.10,000 நிதியுதவி, 1997 முதல் ரூ.20,000 நிதியுதவி.
- அரசு ஊழியர்களுக்குக் குடும்பப் பாதுகாப்புத் திட்டம்.
- பணிக் காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி.
- டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம். 1975-ல் திட்டம் தொடக்கம், 1989-ல் நிதியுதவி ரூ.5,000. 1997 – 1998-ல் நிதியுதவி ரூ.7,000. 1999 – 2000-ல் நிதியுதவி ரூ.10,000.
- மாநிலத் திட்டக் குழு உருவாக்கம்.
- காவல்துறை மேம்பாட்டுக்கு 1969-ல் முதலாவது காவல் ஆணையம். 1989-ல் இரண்டாவது காவல் ஆணையம். 2006-ல் மூன்றாவது காவல் ஆணையம்.