1989 – 1991 ஆட்சிக் காலம்
- தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பொங்கல் முன்பணம் உள்ளிட்ட சலுகளைகள்.
- பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிடத் தனிச் சட்டம்
- ஏழைப் பெண்கள் பயன்பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம். 1989-ல் ரூ.5,000 நிதியுதவி, 1996-ல் ரூ.10,000 நிதியுதவி, 2006-ல் ரூ.15,000 நிதியுதவி, 2007-ல் ரூ.20,000 நிதியுதவி.
- ஈ.வெ.ரா – நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்.
- ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், வருமான வரபுக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோரில் பெண்களுக்குப் பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி, 2008-ல் முதுகலைப் பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி.
- கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம். 1989- 1990-ல் ரூ.200 நிதியுதவி, 1996- 2001-ல் ரூ.500 நிதியுதவி, 2006-ல் ரூ.6,000 நிதியுதவி.
- மகளிர் திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்.
- வன்னியர், சீர்மரபினர் உட்பட மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு தனி இட இதுக்கீடு.
- ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு இட ஒதுக்கீடு நிர்ணயித்து, பழங்குடி இனத்தவருக்கு 1 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு.
- மகளிர்க்கு அரசு வேலை வாய்ப்பில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு.
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
- நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு.