கலைஞர் காப்பீட்டுத் திட்டம்
வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு 18 ஆயிரத்து 742 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே 72 லட்சத்து 5 ஆயிரம் ஏழை எளியோர் பயனடைந்தனர்.
தமிழகத்திலுள்ள 1421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புதியதாக உருவாக்கப்பட்ட 116 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா மூன்று செவிலியர்கள் டாக்டர்களை பணியமர்த்தி 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிப்பதால் 2005-2006ல் நடைபெற்ற மகப்பேறுகள் 82,532 என்பது 2009-2010-ல் 2,98,853 ஆக மூன்று மடங்கு உயர்ந்தது.
குழந்தைகள் உயிர் காத்திடக்கூடிய அறுவை சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாயும், சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாயும், கடினமான திறந்த அறுவை கிசிச்சைக்கு லட்ச ரூபாயும் என அரசு நிதி உதவி வழங்கப்பட்டது. 2.11.2007-ல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டம், 3.6.2008-ல் தொடங்கப்பட்ட பள்ளி சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின் கீழ் 3,264 சிறார்க்கு 17 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவ மனைகளின் மூலம் இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு குழந்தைச் செல்வங்களின் அரிய உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்துடன் இணைந்து 445 ஊர்திகளுடன் கூடிய “ அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்” தமிழகம் முழுவதும் 15.9.2008-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் 8 லட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயனடைந்து உள்ளனர்.
உயிர் காக்கும் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஜூலை 2009 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அதனால் ஒரு கோடியே 34 லட்சத்து 3 ஆயிரத்து 328 ஏழை மக்களுக்கு 781 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் உயிர்காக்கும் அறுவை சிசிக்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உடற்பரிசோதனை செய்யும் “நலமான தமிழக திட்டம் “அறிமுகப்படுத்தப்பட்டது.
மருத்துவமனையில் சிசிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தவர்களின் உடல்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல இலவசமாக அமரர் ஊர்தி சேவைத் திட்டம் கலைஞர் ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது.